- காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. அவந்திபோராவில் மீண்டும் பதற்றம்

ம.இ.கா தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்தார்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணிய ஆலய வளாகத்தில் ம இ கா ஏற்பாடு செய்திருந்த தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நாஜிப் துன் ரசாக் கலந்து சிறப்பித்தார். ம இ கா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் மற்றும் ம இ கா பிரமுகர்கள் பிரதமரை வரவேற்றனர். இந்நாட்டில் பண்டிகை காலங்களில் நடத்தப்படும் இதுபோன்ற திறந்த இல்ல பொது உபசரிப்புகள் பல இன மக்களிடையே நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும், ஒற்றுமை உணர்வையும் மேம்படுத்த பெரிதும் உதவுவதாக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள்,

டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா மற்றும் டத்தோஸ்ரீ SK தேவமணி கலந்துகொண்ட பக்தி சக்தியின் சூரசம்ஹாரம் மாணவர்களுக்கான கருத்தரங்கம்
இன்று 01/10/2017 அன்று மலாயா பல்கலைக்கழகத்தில் உள்ள லிம் கோ தோங் மண்டபத்தில் பக்தி சக்தி ஏற்பாட்டில் “சூரசம்ஹாரம்” என்ற இந்திய மாணவர்களுக்கென சிறப்பு கருத்தரங்கம் மற்றும் பெற்றோருக்கான எழுச்சியுரை காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற்றது. இந்த சிறப்பு கருத்தரங்கை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் ம.இ.கா வின் தேசிய தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையேற்று துவக்கி வைத்து மாணவர்களிடையே உரையாற்றினார். மத்திய பிரதம மந்திரி அமைச்சகத்தின் துணை அமைச்சரும் ம.இ.காவின் தேசிய துணை தலைவருமான டத்தோஸ்ரீ SK தேவமணி அவர்கள் ஏற்பாடு செய்து கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப் படுத்தி

மலேசியாவில் ஒரு இசைக் கல்லூரி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் இசைஞானி
மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் ஏற்பாட்டில் அக்டோபர் 07 ஆம் தேதி மாலை 07 மணியளவில் ஆக்சியாடா அரினா உள் அரங்கில் ராஜா த ஒன் மேன் என்ற இசைஞானி இளையராஜாவின் இன்னிசை மேடை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க இசைஞானியும் அவரது ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் மற்றும் மேடையில் பாடப் போகும் இந்தியாவின் மிகப் பிரபலமான பாடகர்களும் மலேசியா வந்தடைந்தனர். மலேசியா வந்துள்ள இளையராஜா அக்டோபர் 04 அன்று ராஜா த ஒன் மேன் இசை நிகழ்ச்சி குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார். நேற்று 05 அக்டோபர் 2017 மாலை இளையராஜா இசை மற்றும் மேலான்மை