சர்வதேச பிரைன் பீ போட்டியில் பங்குபெறும் எல்வின் ராஜ் P.கமலநாதனிடம் வாழ்த்து பெற்றார்

சர்வதேச பிரைன் பீ போட்டியில் பங்குபெறும் எல்வின் ராஜ் P.கமலநாதனிடம் வாழ்த்து பெற்றார்

 

18july_elwinraj_1

எதிர்வருகின்ற ஆகஸ்டு மாதம் 3ஆம் தேதி முதல் 06 தேதி வரை வாஷிங்டன்னில் நடைபெற இருக்கும் சர்வதேச பிரைன் பீ (International Brain Bee) போட்டியில் மலேசிய சார்பில் கலந்து கொள்ள தேர்வாகி இருக்கும் திரு. எல்வின் ராஜ் a/p பால்ராஜ் வேதமுத்து 18/07/2017 அன்றூ மதியம் மத்திய கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோ P.கமலநாதனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். ஸ்ரீ பிந்தாங் இடைநிலை பள்ளி மாணவரான எல்வின் ராஜ் 17 வயதே நிரம்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் 2 ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை குபாங் கேரியன் கிளாந்தானில் அமைந்துள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மலேசியா பிரைன் பீ சேல்லன்ச் 2017 போட்டியில் (Malaysia Brain Bee Challenge 2017) வெற்றி பெற்றதால் அவருக்கு வாஷிங்டன்னில் நடைபெறும் போட்டியில் பங்குபெற இந்த வாய்ப்பை பெற்றார் இந்த சர்வதேச போட்டியில் வெற்றி பெற P.கமலநாதன் அவர்கள் எல்வின் ராஜுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

18july_elwinraj_2 18july_elwinraj_3