மஇகா தலைமையகத்தில் நேற்று கைகலப்பு எற்பட்டது

மஇகா தலைமையகத்தில் நேற்று கைகலப்பு எற்பட்டது

mic2

டிசம்பர் 19, மஇகா தலைமையகத்தில் நேற்று சர்ச்சைக்குரிய வகையில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்தின் போது, வெளியே குழுமியிருந்த கூட்டத்தித்தினரிடையே சிறு அளவிலான மோதல்களும், கைகலப்புகளும் வெடித்தன.
கூட்டம் முடிந்து மத்திய செயலவை உறுப்பினர்கள் மஇகா தலைமையகத்திலிருந்து வெளியேறிய போது ஒரு நீல நிற பிஎம்டபிள்யூ ரக காரை பலர் சூழ்ந்து கொண்டனர். அந்தக் கார் மீது சிலர் காலால் உதைத்தும், கைகளால் கண்ணாடி மீது ஓங்கிக் குத்தியும் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு கூடியிருந்த கலகத்தடுப்பு போலீசார் பாதுகாப்பு அரண் அமைத்து அந்த வாகனம் வெளியேற வழி அமைத்துக் கொடுத்தனர். மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு ஆதரவாக குமார் அம்மான் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே டத்தோஸ்ரீ பழனிவேல் மஇகா தலைமையகத்தில் உள்ள சந்திப்பு அறையிலிருந்து வெளியே வந்தபோது கோபாவேசத்துடன் அவரை சூழ்ந்துகொண்ட மஇகா உறுப்பினர்கள் பலர் ‘ராஜினாமா செய், எங்களுக்கு மறுதேர்தல் வேண்டும்’ என முழக்கமிட்டனர்.