சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் பலியானவர்களுக்காக தேசிய துக்க தினத்தை அனுஷ்டித்த ஆஸ்திரேலியா

சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் பலியானவர்களுக்காக தேசிய துக்க தினத்தை அனுஷ்டித்த ஆஸ்திரேலியா

dfdfe

கடந்த மாதம் 17-ம் தேதியன்று ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு 298 பேருடன் பறந்துகொண்டிருந்த எம்எச்17 என்ற மலேஷியா விமானம் ஒன்றை கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அனைவரும் இறந்தனர்.

இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 38 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரின் சடலங்களை தாய்நாட்டுக்குக் கொண்டு வருவதற்காக நூற்றுக்கணக்கான ராணுவம், பாதுகாப்பு மற்றும் பிற அதிகாரிகளை ஆஸ்திரேலிய அரசு இந்தப் பணியில் ஈடுபடுத்தியிருந்தது. ஆனால் மீட்புப் பணிக் குழுவினரின் பாதுகாப்பு காரணமாக தேடுதல் பணி நேற்று நிறுத்திக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

உள்நாட்டுப் போரினால் கிழக்கு உக்ரைன் பகுதியில் நிலவிவரும் பாதுகாப்பு குறைவு காரணமாக மீட்புப் பணி தொடர்ந்து செயல்பட முடியாது என்று நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே தெரிவித்தார். எனவே, விக்டோரியா மாகாணத்தின் மெல்போர்ன் நகரில் உள்ள செயின்ட் பாட்ரிக் தேவாலயத்தில் இன்று இறந்தவர்களுக்கான நினைவு சேவை நடைபெற்றது.

இந்த மாகாணத்திலிருந்து இறந்த 16 பேரை நினைவுகூறும் வண்ணம் ஆலய மணி 16 முறை அடித்தது. இங்கு கூடியிருந்த இறந்தவர்களின் குடும்பங்களுடன் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட், மாகாண கவர்னர் ஜெனரல் சர் பீட்டர் காஸ்க்ரோவ் போன்றோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஆஸ்திரேலிய மக்கள் 38 பேருடன் இறந்தவர்கள் அனைவரையுமே நினைவு கூறுவதாகத் தனது உரையில் தெரிவித்த பிரதமர் டோனி அபோட் உக்ரைனில் தேடுதல் நிலைமை சீரடைந்தவுடன் சம்பவ இடத்தில் எஞ்சியுள்ள அடையாளங்களை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்று உறுதி கூறினார்.