சிலாங்கூர் முதலமைச்சர் பிரச்சனை : நல்ல முடிவு எடுக்க சுல்தானுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்

சிலாங்கூர் முதலமைச்சர் பிரச்சனை : நல்ல முடிவு எடுக்க சுல்தானுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்

SIVARRAAJHCHANDRAN

சிலாங்கூர் முதலமைச்சர் பிரச்சனையில் நல்ல முடிவை விரைவாக சுல்தான் எடுக்க அவருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் முதல்மந்திரி பிரச்சனை கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து எந்த முடிவும் எட்டப்படாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் வளர்ச்சி பணிகளும் மக்களின் நலனும் வெகுவாக பாதிக்க்பபட்டுள்ளது.

இந்த பிரச்சனைக்கு பக்கத்தான் ராயாட் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகிம்தான் மூலக் காரணம். தானே செலாங்கூர் மாநிலத்தின் முதல் மந்திரி ஆகிவிட வேண்டும் என்ற திட்டத்தோடு மட்டுமே காஜாங் சட்டமன்ற உறுப்பினர் திரு லிம் சின் சே வை கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்தார். நீமன்றத்தில் அவர் மீது இருந்த செக்ஸ் புகார் வழக்கு விசாரணையில் இருந்ததால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனதால் அவரது மனைவி டத்தின் ஸ்ரீ டாக்டர் வான் அசீஸா வான் இஸ்மாயில் அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவர் பெற்றியும் பெற்றார். அன்வர் மற்றும் டி.ஏ.பி யில் உள்ள அவரது சகாக்கள் மூலம் முதலமைச்சர் தன் ஸ்ரீ காலிட் இப்ராஹிம் மீது பழி சுமத்தி பி.கே.ஆர் கட்சியை விட்டே காலிட்டை நீக்கினார். பின்னர் டாக்டர் வான் அசீஸாவை முதலைமைச்சர் பதவிக்கான ஒரே ஒரு வேட்பாளராக சுல்தானிடம் தெரிவித்தனர்.

இரண்டு பாஸ் உறுப்பினர்களை தம் பக்கம் இழுத்து தனது மனைவிக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் ஆகையால் சுல்தான் அவரையே முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த முயற்சித்தனர்.

இறுதியாக சுல்தான் பி.கே.ஆர் கட்சியின் அஸ்மின் அலி மற்றும் பாஸ் கட்சியை சார்ந்த இஸ்கந்தர் சமாட் மற்றும் டாக்டர். அகமது யூனஸ் ஹைரி ஆகிய மூன்று பேரை மட்டுமே முதல் அமைச்சர் பரிந்துரைக்கு ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால் பி.கே.ஆர் சுலதானை சந்தித்து ஏன் டாக்டர் அசீஸா மட்டுமே முதலைமைச்சர் பதவிக்கு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என விளக்கமளிக்க வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் பக்கத்தான் தலைவர் திரு. அன்வர் அவர்கள் சுல்தானை டாக்டர் அசீஸாவையே முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக தெரிகிறது. சுல்தானுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அவர் சுதந்திரமாக செயல்படுத்த அவரை அனுமதிக்க வேண்டும். இத்தனை தடைகளையும் தாண்டி வருகிற செவ்வாயன்று முதலமைச்சர் யார் என தேர்ந்தெடுக்கும் நிலைக்கு சுல்தான் வந்திருக்கிறார். சிலாங்கூர் மக்களுக்கு நன்மை பயக்கும் சிறப்பான ஒரு சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு முதலமைச்சரை சுல்தான் தன் சுய விருப்பப்படி தேர்ந்தெடுத்து அறிவிக்க அவருக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும்.

இவ்வாறு திரு.சிவராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.