MILFF 2017 மோஜோ பியூஷன் இசை நிகழ்ச்சி செப்டம்பரில் நடைபெறுகிறது

MILFF 2017 மோஜோ பியூஷன் இசை நிகழ்ச்சி செப்டம்பரில் நடைபெறுகிறது

milff2017_4

உலகம் முழுதும் மோஜோ வகை பாட்டு நிகழ்ச்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வகையில் மலேசியாவில் மிகப் பிரமாண்டமான மோஜோ நிகழ்ச்சி மேடையில் லைவ் நிகழ்ச்சியாக நடத்தப்பட இருக்கிறது.

எதிர்வருகின்ற செப்டம்பர் 09 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் KWC பேஷன் மாலில் ஸ்டார் எக்ஸ்போ செண்டரில் MILFF – மலேசியன் இண்டிபெண்டண்ட் பியூஷன் பெஸ்டிவல் நடக்க இருக்கிறது.

இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் பிரபல பாடல்களை அவர்களின் தனி பாணியில் பாடுவார்கள். ஒவ்வொரு பாடகரும் அவருக்கான தனி தனி இசைக் குழுவினருடன் இணைந்து பாடுவார்கள். இந்த மோஜோ வகை இசைக் கச்சேரியில் விஜய் பிரகாஷ் – ஏ.ஆர்.பி. பேண்ட் கூட்டணி, அகம், சித் ஸ்ரீராம் அவருடைய பேண்ட் கூட்டணி, ஜடாயு – சூரஜ் சந்தோஷ் கூட்டணி மற்றும் ஆலாப் ராஜு அவரது பேண்ட் கூட்டணி ஆகியோர் பாடியும் இசைத்தும் அசத்த இருக்கிறார்கள்.

இந்த இசை நிகழ்ச்சியை மோஜோ ப்ராஜட்க்ஸ் வழங்குகிறார்கள். எரிக்கோ நிறுவனம் ஆதரவில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

உள்ளூர் கலைஞர்களான பாலன் காஷ்மீரா, THR கவிமாறன் ஆகியோர் இந்த இ9சை நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றனர்.

இப்படியான இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் உள்ளூர் கலைஞர்கள் பல புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வர் என்றும் இதனால் இசையின் மூலம் ஒரு நல்ல எதிர்காலம் அவர்களுக்கு அமையும் என்றும்  MILFF 2017 குறித்து ஞாஇற்றுக்கிழமை 06/08/2017 அன்று மாலை  நடைபெற்ற ஒரு மீடியா சந்திப்பில் தெரிவித்தார்கள்.

milff2017_1 milff2017_2 milff2017_3 milff2017_5 milff2017_6