ஐஜிபி: வெள்ளதிற்கு இதுவரை 21பேர் பலியாகியுள்ளனர்

ஐஜிபி: வெள்ளதிற்கு இதுவரை 21பேர் பலியாகியுள்ளனர்

rain2

டிசம்பர் 31, கிழக்கு கரை மாநிலகளில் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த சாலைகளை திருத்தி அமைக்க ராணுவத்தை பயன்படுத்துமாறு தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார்.
சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதை எண்ணித்தான் கவலையடைகிறேன். உணவுப் பொருள்களைக் கொண்டுசெல்வது சிரமமாக இருக்கிறது. ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அவற்றையும் வானிலை நன்றாக இருந்தால்தான் பயன்படுத்த முடியும்.
முதலில், பழுதுபார்க்க வேண்டிய சாலைகளை அடையாளம் காண ஆய்வு செய்யப் போகிறேன். பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று அமைச்சர் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.
போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், வெள்ளத்தில் 21 பேர் பலியானதை இன்று உறுதிப்படுத்தினார். 14 பேர் கிளந்தானிலும் நால்வர் திரெங்கானுவிலும் மூவர் பகாங்கிலும் உயிரிழந்ததாக அவர் சொன்னார்.
மேலும், சிலரைக் காணவில்லை என்றும் புகார் செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். கிளந்தானில் நால்வர், திரெங்கானுவில் ஐவர், பகாங்கில் ஒருவர்- ஆக மொத்தம் 10 பேரைக் காணவில்லை.