உயர்கல்விக்கான செயல்திட்டம்

உயர்கல்விக்கான செயல்திட்டம்

download (18)

டிசம்பர் 10, கோலாலம்பூர்: துணை பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருமான தான் ஸ்ரீ மொய்தின் யாசின் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழையும் போது இன்னும் ஆங்கிலத்தை கண்டு அஞ்சுகின்றனர். மாணவர்கள் பள்ளிகளிலேயே அடிப்படை ஆங்கிலத்தில் தெளிவாக இருந்தால்.
பல்கலைகழகங்களுக்கு வரும்போது மாணவர்களுக்கு ஆங்கிலம் ஒரு சுமையாக இருக்காது என்றார். அவ்வாறு இருந்தால் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் போது அவர்களின் கவனம் ஆங்கிலத்தை மேம்படுத்துவதில் இருக்கும் என்றார்.
மொய்தின் மாணவர்கள் குறைந்தது 19 ஆண்டுகள் ஆங்கிலம் பயில்கின்றனர் இருப்பினும் மாணவர்கள் ஆங்கிலத்தைக் கண்டு அஞ்சுவதன் காரணம் புரியவில்லை. ஒருவேளை அது ஆசிரியர்களின் தரம் மற்றும் மாணர்களின் ஆர்வக் குறைப்பாட்டால் இருக்கலாம் என்றார்.
மேலும் மொய்தின் உயர்கல்விக்கான செயல்திட்டம் எதிர்க்கால தேவைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகளை மாணவர்கள் எதிர்க்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் என்றார்.
பொது மக்களும் உயர்கல்வி செயல்திட்டத்திற்கான அவர்களின் கருத்துக்களை heblueprint@moe.gov.my அல்லது http://moe.gov.my/v/heblueprint என்ற இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.