கேமரன் மலையில் நேற்றிரவு நிலச்சரிவு மற்றும் வெள்ளம்

கேமரன் மலையில் நேற்றிரவு நிலச்சரிவு மற்றும் வெள்ளம்

p18a

நவம்பர் 6, கேமரன் மலையில் நேற்றிரவு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளதாகப் போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதையும் போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் பலியானவர் நேப்பாள தோட்டத்தொழிலாளரான முகமது யூசோப் (வயது66) என கேமரன் மலை மாவட்ட துணை சுப்ரிடெண்டன் முகமது சஹாரி வான் புசு தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நேப்பாள தோட்டத்தொழிலாளி தங்கியிருந்த வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததால் அவர் மண்ணில் புதையுண்டு நிகழ்விடத்திலேயே மரணமடைந்தார்.
நேற்றைய நிலச்சரிவில் 40 வயதான இஸ்மாவான்டி என்ற இந்தோனேசிய ஆடவரும் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே நேற்றிரவு 8.30 மணிக்கு பெர்த்தாம் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மண்சரிவில் 48 வயதான அபியான் எனும் இந்தோனேசிய ஆடவர் பலியாகினார்.
தனது மனைவியுடன் அவர் குடியிருந்த வீடு மண்ணோடு புதையுண்டதில் அவர் பலியானார். அவரது மனைவி உயிர் தப்பினார்.
இதனிடையே, 13 வயது சிறுவன் ஒருவன் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்றிரவே மீட்புப் பணிகள் நடைபெற்றாலும், இருள் காரணமாகவும், ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதாலும், இரவு 11 மணியளவில் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.