தான் ஸ்ரீ சுப்ரமணியம் வெட்ரன் கிண்ணம் கால்பந்து போட்டி : சிலாங்கூர் வெற்றி

தான் ஸ்ரீ சுப்ரமணியம் வெட்ரன் கிண்ணம் கால்பந்து போட்டி : சிலாங்கூர் வெற்றி

SubraFB2 SubraFB16

மலேசிய இந்தியர் கால்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்திருந்த தான் ஸ்ரீ சுப்ரமணியம் வெட்ரன் கிண்ணம் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த 04/10/2014 அன்று மாலை 03.00 மணியளவில் பாங்கி தேசிய பல்கலைக்கழகத்தில் சிலாங்கூர் மற்றும் பினாங்கு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இறுதி போட்டியில் பெனால்டி முறையில் 3-2  என்ற கோல்கணக்கில் சிலாங்கூர் அணி வென்று தான் ஸ்ரீ சுப்ரமணியம் வெட்ரன் கிண்ணத்தை தட்டிச் சென்றது.

முன்னதாக 16 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அரை இறுதி போட்டிக்கு பினாங்கு, சிலாங்கூர் ஏ, சிலாங்கூர் பி மற்றும் கோலாலம்பூர் அணிகள் தகுதி பெற்றன. முதலாவதாக நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் பினாங்கு அணி 2-1 என்ற கோல்கணக்கில் கோலாலம்பூர் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது. அடுத்த நடைபெற்ற இரண்டாவது அரையிறுது போட்டியில் சிலாங்கூர் ஏ அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிலாங்கூர் பி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

ஒதுக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் சமநிலையிலேயே இருந்தது. பின்னர் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. பின்னல் பெனால்டி முறையில் இரு அணிகளுக்கும் தலா ஐந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. பெனால்டியிலும் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டு சம நிலையிலேயே இருந்தன. பிறகு வழங்கப்பட்ட தலா ஒரு கோல் பெனால்டியில் சிலாங்கூர் ஒரு கோல் போட்டு போட்டியில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2014 வருடத்திற்கான தன் ஸ்ரீ சுரமணியன் வெட்ரன் கிண்ணம் கால்பந்து போட்டி சாம்பியனானது சிலாங்கூர் அணி. வெற்றி பெற்ற சிலாங்கூர் அணிக்கு கோப்பையும் 5000 வெள்ளி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பிடித்த பினாங்கு அணிக்கு 3000 வெள்ளி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.  மூன்றாவது இடம் பிடித்த கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் பி அணிகளுக்கு தலா 1000 வெள்ளி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

தொடரின் சிறந்த கோல் மன்னன் விருது பினாங்கு அணியை சேர்ந்த யோகேஸ்வரனுக்கும் சிறந்த ஆட்டக்காரர் விருது சிலாங்கூர் அணியை நேர்ந்த ராஜனுக்கும் வழங்கப்பட்டது. இறுதி ஆட்டத்தில் சிறந்த ஆட்டக்காரர் விருது சிலாங்கூர் அணியின் கோல் கீப்பர் சரவணனுக்கு வழங்கப்பட்டது.

SubraFB8 SubraFB6 SubraFB13SubraFB18SubraFB5SubraFB7  SubraFB9 SubraFB10 SubraFB11 SubraFB12

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு டத்தோ T.மோகன், டத்தோ எஸ்.பதி, டாக்டர் இ.பார்த்திபன், திரு. பச்சையப்பன் ஆகியோர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினர்.

SubraFB1 SubraFB3 SubraFB4 SubraFB19