தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவரின் 2015 புத்தாண்டு வேண்டுதல்

தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவரின் 2015 புத்தாண்டு வேண்டுதல்

Sivaraj1 (1)

ஜனவரி 1, தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவினர் சார்பில் இவ்வருடம் புத்தாண்டு வாழ்த்துகள் வழங்கமால் வேண்டுதலை முன்வைக்கிறோம். காரணம் வாழ்த்து சொல்லும் அளவிற்கு நாங்களும், அதனை பெறுவதற்கு நாட்டின் நிலைமையும் மகிழ்ச்சியாக இல்லை.

பஞ்ச பூதங்களில் தீயைத் தவிர நீர், நிலம், ஆகாயம், காற்று ஆகிய அனைத்தாலும் நமது நாடு 2014வருடம் ஆட்டி வைக்கப்பட்டுவிட்டம். காற்று தூய்மைக்கேடு, டிங்கி, mh370, mh17, qz8501, கேமரன் நிலச்சரிவு, வெள்ள, தண்ணீர் தட்டுப்பாடு, என ஏகப்பட்ட இயற்கை பேரிடர்களால் நமது நாட்டு மக்கள் அல்லோலப்பட்டுவிட்டனர். ஆக எங்களது வேண்டுதல் பிறக்க இருக்கும் 2015ஆம் ஆண்டு நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது பயக்கவும் இயற்கை இன்னல்கண் குறையவும் இறைவனை வேண்டுகிறோம்.

அதுமட்டும்மின்றி, நாம் இப்புது ஆண்டில் நம்மை, நமது சிந்தனையை புதுபித்து கொண்டு காத்திருக்கும் சவால்களை, சந்தித்து சாதிப்போம். சென்ற வருடத்தை காட்டிலும் இப்புது ஆண்டில் வாழ்க்கை தரத்தில், பொருளாதாரத்தில், பழ்க்க வழக்கங்களில், சமுக அக்கறையில், கல்வி, குடுப்ப உறவிகளில் ஒரு படியாவது நாம் முன்னேறுவதை அவசியமாக கொண்டிருத்தல் வேண்டும். ஆக அத்தகைய மாற்றத்திற்கு எது தேவையோ அதை திட்டமிட்டு இன்றிலிருந்தே செயல்படுத்த வேண்டும்.

ஆகவே இப்புத்தாண்டில் மலேசிய வாழ் மக்கள், குறிப்பாக இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, பொருளாதாரத்தில், கல்வியில், விளையாட்டுத் துறையில் மேன்மையடைந்து சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவணை வேண்டி கொள்கிறேன். நன்றி.