MH370 விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது

MH370 விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது

mh17

நவம்பர் 5, MH370 விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது. விமானம் அதிகாரப்பூர்வமாகக் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டப் பின் கடந்த மார்ச் 8-ஆம் தேதி அவ்விமானத்தில் பயணம் செய்த வாரிசுகளுக்கான இழப்பீட்டை ஏற்பாடு செய்ய முடியும்.
‘எனவே, MH370 விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் விமானம் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை அமைதியாகக் காத்திருக்கும் படி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஹக் டுன்லீவி தெரிவித்தார்.
“எங்களுக்குத் தற்போது இறுதி நாள் தெரியவில்லை. விமானம் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் இழப்பீடுத் தொகையை வாரிசுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என அவர் கூறினார்.
கடந்த மார்ச் 8-ஆம் தேதி, நள்ளிரவு 12.41 மணிக்கு 227 பயணிகள் மற்றும் 14 விமானப் பணியாளர்களுடன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட MH370 விமானம் அதிகாலை 1.20 மணிக்கு ராடாரிலிருந்து மாயமானது.

மலேசியா-வியட்னாமிய எல்லையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த போயிங் 777 ரக விமானம் மலாக்கா கடல் பகுதி வரை திரும்ப பறந்து இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.