மீண்டும் துயரம்- மலேசிய விமான நிறுவனத்தின்(மாஸ்) எம்எச்17 விபத்து

மீண்டும் துயரம்- மலேசிய விமான நிறுவனத்தின்(மாஸ்) எம்எச்17 விபத்து

332310849

 

ஹாலாந்து தலைநகர் ஆம்ஸ்டார்மில் இருந்து கோலாலம்பூர் நோக்கி புற்பட்டு வந்த மலேசிய விமான நிறுவனத்தின்(மாஸ்) எம்எச்17 போயிங் 777  விமானம் நேற்று 17/07/2014 ரஷ்ய எல்லைக்கு அருகில் கிழக்கு யுக்ரேன் பகுதியில் 30,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் பலியாகி விட்டனர். 280 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் பயணம் செய்த விமானம் தரையில் இருந்து வான் நோக்கிச் செலுத்தப்படும் ஏவுகணையின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளதாக நம்பப்படுகிறது.

இன்று 18/07/2014 அதிகாலை 4.35க்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மலேசிய பிரதமர் நஜிப் துன் ராசாக், விமானம் சுட்டு வீழ்த்தபட்டதாக யுக்ரேனின் அதிகாரிகள் நம்புவதாகவும் ஆனால் உண்மையான காரணம் இன்னும் அறியப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

“விபத்து நடந்த தளத்தை ஒரு சர்வதேச குழு முழுமையாக  கண்காணிக்க வேண்டும். கருப்பு பெட்டி உட்பட எந்த குப்பைகளையும்  யாரும் இப்பகுதியில் இருந்து வெளியே கொண்டு செல்ல கூடாது,” என்று நஜிப் கூறினார்.

“விமானம் உண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்டது என்றால், இந்த கொடுமையை புரிந்தவர்கள் விரைவில் நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டும்”, என்று வலியுறுத்தினர்.

மலேசிய விமான நிறுவனம் MAS , விமானம் பாதுகாப்பான சர்வதேச விமான போக்குவரத்து பாதையில் தான் பயணம் செய்தது என உறுதிபட கூறினார். மேலும், விமானத்தில் இருந்து எந்த அபாய அழைப்பும் வரவில்லை எனவும் அறிவித்தார்.

-

 

காணொளி : nstonlinetv
https://www.youtube.com/watch?v=OOd_CH04Nlw