சிவராஜ் சந்திரன் ம.இ.கா.வின் கேமரன் மலை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

சிவராஜ் சந்திரன் ம.இ.கா.வின் கேமரன் மலை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

28july_sivarajj

எதிர்வருகின்ற 14வது பொதுத் தேர்தலுக்கு ம.இ.கா கட்சி தன்னை தயார் படுத்திக் கொண்டு வருகிறது. இந்த வகையில் ம.இ.கா போட்டியப் போகும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகள் ஒவ்வொன்றுக்கும் 5 நபர் கொண்ட குழுவை அமைத்து தேர்தல் பணிகளை முடிக்கி விட்டிருக்கிறது ம.இ.கா தலைமை. இந்த 5 பேரில் யாரேனும் ஒருவரே அந்த தொகுதியின் வேட்பாளராக எறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது, ம.இ.கா தலைமை இந்த தகவலை மறுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரனை கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதிக்கான ஒருங்கிணைப்பாளராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நியமனத்தை தொடர்ந்து சிவராஜும் கேமரன் பகுதி ம.இ.கா வுடன் இணைந்து தேர்தல் பணிகளை துவக்கி உள்ளார்.