இந்தியா

மலேசியாவில் ஒரு இசைக் கல்லூரி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் இசைஞானி

மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் ஏற்பாட்டில் அக்டோபர் 07 ஆம் தேதி மாலை 07 மணியளவில் ஆக்சியாடா அரினா உள் அரங்கில் ராஜா த ஒன் மேன் என்ற இசைஞானி இளையராஜாவின் இன்னிசை மேடை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க இசைஞானியும் அவரது ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் மற்றும் மேடையில் பாடப் போகும் இந்தியாவின் மிகப் பிரபலமான பாடகர்களும் மலேசியா வந்தடைந்தனர். மலேசியா வந்துள்ள இளையராஜா அக்டோபர் 04 அன்று ராஜா த ஒன் மேன் இசை நிகழ்ச்சி குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார். நேற்று 05 அக்டோபர் 2017 மாலை இளையராஜா இசை மற்றும் மேலான்மை

பிரதமருடன் சுகாதாரத்துறை அமைச்சரும் மலேசிய குழுவினரும் இந்திய தமிழகம் பயணம்

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இரசாக் தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநர் மேதகு வித்யாசாகர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மரியாதை நிமித்தம் 30/03/2017 அன்று இந்திய நேரப்படி மாலை 6.45 மணிக்கு சந்தித்துப் பேசினார். அவர்களுடன் மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களும் இதர மலேசியப் பேராளர்களும் கலந்து கொண்டனர். இச்சந்திப்பு வரலாற்றுப் பூர்வமாக அமைந்தது மட்டுமின்றி இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தக்கூடிய சில முக்கிய அம்சங்களும் கலந்துரையாடப்பட்டன. இந்த சந்திப்பில் பிரதமருடன் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் திரு. P.கமலநாதன், மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை இணை

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்திற்கு யார் முதலமைச்சர் என கடந்த சில தினங்களாக நடந்த குழப்பத்திற்கு ஒரு முடிவு வந்துவிட்டது. அ.இ.அ.தி.மு.க சசிகலா பிரிவு எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்த திரு .எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க மண்புமிகு தமிழக ஆளுநர்(பொறுப்பு) திரு. வித்யாசர் ராவ் அவர்கள் இன்று அழைப்பு விடுத்திருக்கிறார். இன்று 16-02-2017 மாலை 4.30 மணிக்கு திரு. எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்கிறார். அதை தொடர்ந்து அடுத்த 15 நாட்களில் சட்டசபையில் அவர் தனது பெறும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

சசிகலா ஜெயிலுக்கு போய்விட்டதால் போட்டி இப்போது பன்னீர்செல்வத்துக்கும் பழனிச்சாமிக்குமாக மாறியிருக்கிறது

  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. திருமதி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரில் கோர்ட்டில் சரணடைந்து ஜெயில் அடைக்கப்பட்ட பிறகும் குழப்பம் தீரவில்லை. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் திரு. எடப்பாடி பழனிச்சாமியை தங்களது சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்து அதற்கான கடிதத்தை திரு எடப்பாடி பழனிச்சாமி தமிழக பொறுப்பு ஆளுநரான மாண்புமிகு வித்யாசாகர் ராவ் அவர்களிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை போரியுள்ளார். சசிகலா Vs பன்னீர்செல்வம் என இருந்த மோதல் களம் இப்போது பன்னீர்செல்வம் Vs. பழனிச்சாமி என காட்சிகள் மாறியிருக்கிறது. இன்னும் எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக

Online Tamil News in Malaysia

ஜனவரி 06, மத்திய ஆயுத போலீஸ் படைகளில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு மேம்படுத்தும் வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஆகியவற்றில் 33 சதவீத இடஒதுக்கீடும் எல்லை பாதுகாப்பு படை, சகஸ்திர சீமா பால், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் ஆகிய எல்லை படை பணிகளுக்கு 15 சதவீத இடஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Online-Tamil-News-Malaysia

ஜனவரி 05, தமிழகத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதித்தது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்கு ரூ.5000 நிவாரண உதவியும், குடிசைகளை இழந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 30 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கப்படுகிறது. வெள்ள நிவாரண நிதி ரூ.5000 டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து பொது மக்கள் ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை எடுத்தனர்.

Tamil-News-Malaysia

டிசம்பர் 31, பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆண்கள், வேட்டி சட்டை, பைஜாமா மற்றும் பேண்ட் சட்டை அணிந்து வரலாம். பெண்கள் சேலை, தாவணி, சுடிதார் அணிந்து வரலாம். இந்த கட்டுப்பாடு நாளை முதல் கோவில் நிர்வாகம் அமல்படுத்த உள்ளது. நாளை முதல் பெண்கள் ஜீன்ஸ், மிடி, லெகின்ஸ் போன்ற ஆடைகள் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

Tamil News Malaysia

டிசம்பர் 30, இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்க பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் 20பேர் எல்லைப்புற வழியாக நுழைந்து உள்ளனர். பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில அரசுகளை எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோவா போன்ற பெரிய நகரங்களில் பொதுமக்கள் கூடும், ரெயில், பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், வழிபாட்டு தலங்களிலும் கூடுதல் படையினரை பாதுகாப்புக்காக நிறுத்தும்படியும் உளவுத்துறை கேட்டுக்கொண்டு உள்ளது.

Online-Tamil-News-Malaysia

டிசம்பர் 29, கடந்த சில ஆண்டுகளாக நடத்த முடியாத நிலையில் உள்ள ஜல்லிக்கட்டு இந்த வருடம் நடைபெறும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்துவருகிறோன் என்று கூறினார். இதுதொடர்பாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரை தொடர்பு கொண்டு பேசியபோது நிச்சயம் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.

Tamil-News-Malaysia

டிசம்பர் 28, வடகிழக்கு பருவமழை இந்த வருடம் கனமழையாக பெய்துவிட்டது. மழை வெள்ள சேதம் பெரிய அளவில் ஏற்பட்டது. மீண்டும் தெற்கு வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் உருவானது. 2 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும், சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.