இலவச மருத்துவ பரிசோதனைகளும் மருத்துவ ஆலோசனைகளும்

இலவச மருத்துவ பரிசோதனைகளும் மருத்துவ ஆலோசனைகளும்

1

ஆகஸ்டு17, சந்தோஷமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான ய்டலும் ஆரோக்கியமான உள்ளமும் அத்தியாவசியமானது. ஆனால் நம்மில் பலர் பிரச்சனை வந்த பிறகுதான் மருத்துவரையும் சிகிச்சையைம் நாடுகிறோம். இது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு சமம். ஆகவே, வருமுன் காப்பாதே சிறந்தது என்பதை கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் இலவச மருத்துவ முகாமை நடத்தி வருகிறது ‘ஆஸ்ட்ரோ’ உறுதுணை ஏற்பாட்டு குழு.

ஏ.எம்.யூ என்றழைக்கப்படும் ஆசியா மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரோ உறுதுணை 5 வெவ்வேறு இடங்களில் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளது. மூன்றாவது இடமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று செனாவாங்கில் உள்ள சிரம்பான் தோட்ட தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 500 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும், ரவாங்கில் உள்ள நோபல் கேர் முதியோர் காப்பகத்துக்கு 2 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.

இலவச மருத்துவ பரிசோதனைகள் மட்டுமன்றி மருத்துவ ஆலோசனைகளும், மது மற்றும் போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9மணி முதல் மதியம் 2மணி வரை நடைப்பெற்ற இந்நிகழ்விக்கு பொது மக்கள் தங்கள் பெற்றோரோடும் பிள்ளைகளோடும் வந்த வண்ணம் இருந்தனர்.

மேலும் வரும் 21-082015 ஜொகூர் பாருவில் உள்ள ஏ.எம்.யூ பல்கலைக்கழகத்திலும் 22-08-2015 ஸ்கூடாயில் உள்ள து அமினா தமிழ்ப்பள்ளியிலும் இந்த மருத்துவ முகாம் நடைபெறவிருக்கிறது. ஜொகூர் பகுதியில் வசிக்ககூடிய சுற்றுவட்டார மக்கள் அதிகமானோர் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றீர்கள்

2 3 4 5 6 7