55 மாணவர்கள் உயர் கல்வியை தொடர விமான பயண செலவை ம இ கா இளைஞர் பிரிவு வழங்கியது

55 மாணவர்கள் உயர் கல்வியை தொடர விமான பயண செலவை ம இ கா இளைஞர் பிரிவு வழங்கியது

MICFreeTicket

மேற்கு மலேசிய பப்ளிக் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை தொடர அனுமதி கிடைத்திருக்கும் 55 ஏழை மாணவர்களின் விமான பயணத்திற்கான செலவை ம இ கா இளைஞர் பிரிவு ஏற்றுக்கொண்டுள்ளது. 23/08/2014 அன்று ம இ கா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ம இ கா இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் மற்றும் செனடர் டத்தோ ஜஸ்பால் சிங் ஆகியோர் பயணச் சீட்டுகளை மாணவர்களுக்கு வழங்கினர். விழாவினை ம இ கா இளைஞர் பிரிவின் உயர் கல்வி பிரிவும் மலேசிய இந்தியர் மாணவர் இயக்கமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்விற்கான ஏற்பாடு செய்திருந்த ம இ கா இளைஞர் பிரிவின் உயர் கல்வி பிரிவு தலைவர் திரு. மகாகணபதி தாஸிற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.