வரவுக்கு மிஞ்சி அளவில் செலவு செய்வதால் திவாலாகும் மலேசிய இளைஞர்கள்

வரவுக்கு மிஞ்சி அளவில் செலவு செய்வதால் திவாலாகும் மலேசிய இளைஞர்கள்

malay

அக்டோபர், 20 மலேசிய இளைஞர்கள் பலர் வரவுக்கு மிஞ்சி அளவில் செலவு செய்வதால் விரைவில் திவாலாவதாக பிரதமர் துறை அமைச்சர் நேன்சி சுக்ரி தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில் திவாலானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 22,000 பேர் திவாலானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2007-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 13,200-ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டைப் பொறுத்தவரை, முதல் ஆறு மாதத்தில் மட்டும் 12,300 மலேசிய இளைஞர்கள் திவாலானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3680 பேர் பெண்களாவர்.

மலேசியர்களில் பெரும்பாலோர் கார் தவணைக் கட்டணம், வீட்டுக்கடன், மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றால் தான் திவாலாவதாக புள்ளிவிபரம் காட்டுகிறது.