மக்கள் கூட்டனியை சாடினார் மஇகா தேசிய இளைஞர் பிரிவின் செயலாளர்  திரு.அர்விந்  கிருஷ்ணன்

மக்கள் கூட்டனியை சாடினார் மஇகா தேசிய இளைஞர் பிரிவின் செயலாளர்  திரு.அர்விந்  கிருஷ்ணன்

Arvindan1 Arvindan2

தேசிய முன்னனியை குறை கூறியே ஆட்சியை கைபற்றியவர்கள்.. இன்று இந்தியர்களின் உரிமைகளை காப்போம்எனும் வாக்குறுதிகளை காற்றிலே பறக்கவிடுவதின் கதைதான் என்ன என மஇகா தேசிய இளைஞர் பிரிவின்செயலாளர் திரு.அர்விந்  கிருஷ்ணன் மக்கள் கூட்டனியின் திடிர் அதிரடி நடவடிக்கைகளை சாடினர்.

அன்று இந்தியர்களின் ஆலயங்களை உடைத்து இந்தியர்களை புறக்கணிக்கிறது தேசிய முன்னனி என சாடியவர்கள் இன்று இந்தியர்களின் உணவகத்தை உடைக்க துணிந்து விட்டனர் என அவர் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணி அளவில் கிள்ளானில் இந்தியர் ஒருவருக்கு  சொந்தமான பார்க்கிளே கார்னர் எனும்  உணவகத்தை  உடைக்க  மாவட்ட  நில  அலுவலக  அதிகாரிகள்,  கிள்ளான்  நகராண்மை கழக  அதிகாரிகள், போலீஸ்காரர்கள்  என  100க்கும்  மேற்பட்டோர்  திரண்டுள்ளனர்.  ஆயினும்,  நானும்  காப்பார் நாடாளுமன்ற  உறுப்பினர்  மணிவண்ணனும்  கடுமையாக  போராடி  அவர்களின்  முயற்சியைத்  தடுத்து  விட்டோம்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் சிலாங்கூரில்  எத்தனையோ சட்டதிற்கு மீறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது,  சம்மந்தப்பட்ட  அதிகாரிகள்  அதனை  சென்று தடுக்க வேண்டியது தானே? எதற்காக பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் இந்தியரின் உணவகத்தை உடைக்க வேண்டும்? அதுவும் அதிகாலையில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த உணவகத்தை இடிப்பதற்கான நோக்கம் தான் என்ன?

அன்று திரண்டிருந்த மாவட்ட நில அலுவலக அதிகாரிகள் சம்மந்தபட்ட உணவகத்தை உடைப்பதற்கு சிலாங்கூர் மாநிலா ஆட்சிக்குழு உறுப்பினர் உத்தரவிட்ட்தாக தெரிவித்தனர். ஆனால் இப்போது சிலாங்கூரில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதோடு, இது குறித்து காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மணிவண்ணனுடன் பேச்சுவார்த்தை நட்த்துவதாக கூறிய அதிகாரிகள் திடிரென உணவகத்தை உடைக்க வந்துள்ளது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு சிலாங்கூர் அரசாங்கம் மரியாதையை வழங்காததைக் காட்டுகின்றது. மேலும், அந்த உணவகம் கிள்ளானில் அமைந்துள்ளது. கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ எங்கு போனார்? ஏன் இந்த உணவகம் உடைப்பு நடவடிக்கைக்கு எதிராக குரலெழுப்பவில்லை? என அவர் கேள்வியெழுப்பினார்.

ஒருவேளை இந்த உணவகம் உடைக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு நீதி கிடைக்கும் வரையில் மஇகா இளைஞர் பிரிவு சார்பில் தாம் போராடவிருப்பதாக அர்விந் கிருஷ்ணன் கூறினார்.