மழை காரணமாக பள்ளிகள் ஜனவரி 12-ஆம் தேதி தொடங்கப்படும்: துணைப்பிரதமர்

மழை காரணமாக பள்ளிகள் ஜனவரி 12-ஆம் தேதி தொடங்கப்படும்: துணைப்பிரதமர்

s1

டிசம்பர் 29, கடந்த சில வாரங்களாகவே நம் நாட்டில் பல மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக பகாங், கிளந்தான், பேரா, கெடா, ஜொகூர் மாநிலங்களும் அடங்கும். இம்மாநிலங்களில் நாளுக்கு நாள் வெள்ளம் கடுமையாகிக் கொண்டே செல்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் நாட்டில் பல இடங்களில் கடுமையான வெள்ளம் நிலவி வருவதைத் தொடர்ந்து இவ்வாண்டு பள்ளி தவணை 1 வாரம் தாமதமாகத் தொடங்கப்படும் என துணைப்பிரதமரும், கல்வியமைச்சருமான டான் ஶ்ரீ முகிதின் யாசின் தெரிவித்தார். இதன் வழி, 2015-ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை கெடா, கிளந்தான், திரங்கானு, மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் ஜனவரி 11-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்படும். மற்றும் இதர மாநிலங்களில் ஜனவரி 12-ஆம் தேதி தொடங்கப்படும் என துணைப்பிரதமர் அறிவித்தார்
பல இடங்களில் வெள்ளம் வற்றாததால், இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கும் பள்ளிக்காக மாணவர்கள் கண்டிப்பாகத் தங்களைத் தயார் செய்ய இயலாதநிலை உருவாகி வருவதால் 2015ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை 1 வாரம் தாமதமாகத் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.