MH370 விமானம் தேடும் பணி தெடரும்: டோணி அபோட்

MH370 விமானம் தேடும் பணி தெடரும்: டோணி அபோட்

Tony_Abbott

மார்ச் 5, கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானம் கண்டுபிடிக்கப்படும் என ஆஸ்திரேலியப் பிரதமர் டோணி அபோட் தெரிவித்துள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 மாயமானது. 239 பேருடன் சென்ற விமானத்திற்கு என்ன ஆனது என்று தெரியாமல் உலகமே குழம்பியது.

MH370 தேடல் பணிக்குப் பொறுப்பேற்றுள்ள ஆஸ்திரேலியா, இந்தியப் பெருங்கடலில் 1600 கிலோ மீட்டர் பரப்பளவில், சோனார் தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்ட 4 கப்பல்களைக் கொண்டு ஆழ்க்கடல் தேடல்பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவும்-மலேசியாவும் இணைந்து 93 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீட்டில் இதுவரை மேற்கொண்ட தேடல் பணியில் இதுவரை எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.