MH17 விமான விபத்தில் பலியான தமிழ் பெண்ணின் பாஸ்போர்ட் பாதி எரிந்த நிலையில் கிடைத்தது

MH17 விமான விபத்தில் பலியான தமிழ் பெண்ணின் பாஸ்போர்ட் பாதி எரிந்த நிலையில் கிடைத்தது

tamilfamily

ஏப்ரல் 15, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் மலேசியா வாழ் தமிழ் குடும்பமும் அடக்கம். அதில் அந்த பெண்ணின் பாஸ்போர்ட் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மலேசிய வாழ் தமிழரான மேபல் அந்தோணிசாமி சூசை அங்கு கல்லூரியில் பேராசிரியையாக இருந்தார். அவர் ஷெல் நிறுவனத்தின் ஐடி பிரிவில் பணியாற்றிய தனது கணவர் பால் ராஜசிங்கம் சிவஞானம்(52), மகன் மேத்யூ(9) ஆகியோருடன் நெதர்லாந்து சென்றுவிட்டு நாடு திரும்புகையில் விபத்தில் சிக்கி பலியானார்.