இந்திய சமுதாய வளர்ச்சிக்கு நான்கு அம்சங்களை கொண்ட வியூகச் செயல் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இந்திய சமுதாய வளர்ச்சிக்கு நான்கு அம்சங்களை கொண்ட வியூகச் செயல் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

23april04

இன்று பிரதமர் அவர்களால் மலேசிய இந்திய சமுதாயத்திற்கான வியூகச் செயல் வரைவுத்திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது மனதுக்கு நெகிழ்ச்சியை அளிக்கிறது என மத்திய சுகாரத்துறை அமைச்சரும் ம.இ.கா தேசிய தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்  . இவ்வரைவுத் தி ட்டம், அரசாங்கத்தில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில், இன்று தொடங்கி அதிகாரபூர்வமாக அமலாக்கத்திற்கும் வருகின்றது.

நாட்டின் 11வது மலேசியத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும் பொழுது, இந்தியச் சமுதாயத்திற்கான வியூகச் செயல் வரைவுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்ற முடிவு பிரதமர் அவர்களால் எடுக்கப்பட்டது. அவ்வகையில், இந்தியச் சமுதாயத்தின் முன்னேற்றத்தை மனத்தில் வைத்துக் கொண்டு அரசாங்கம் வியூக வரைவுத் திட்டத்தை அறிவிப்புச் செய்தது.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழு நாடு தழுவிய அளவில் இருக்கக்கூடிய அரசியல், சமூகம், சமூகவியல், அடிமட்ட மக்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற்று, அந்தக் கருத்துகளின் அடிப்படையில் இந்த வியூக வரைவுத் திட்டம் வரையப்பறுக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவுத்திட்டத்தின் மூலமாக, இந்தியச் சமுதாயத்தில் குறிப்பாக, B40 பிரிவில் இருக்கக்கூடிய மக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த வரைவுத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக, சமுதாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நான்கு நிலைகளில் இந்த வியூக வரைவுத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக, ஒரு குழந்தை முழுமையான ஆற்றலைக் கல்வியின் வழி அடைவதற்கான வாய்ப்பும் வழிவகைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் கல்விக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, இந்திய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. குடும்ப வருமானம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை நல்ல வேலை வாய்ப்புகள், வருமானப் பெருக்கம், வியாபாரத் துறை, வணிகத் துறையின் வழி மேம்படுத்துவதற்கான திட்டங்கள் அடங்கியுள்ளன.

மூன்றாவதாக, இந்திய மக்களின் சமூகநல மேம்பாட்டுத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில், வறுமைக்கோட்டிற்குள் இருக்கக்கூடியவர்கள், குறைந்த வருமானம் பெறக்கூடியவர்கள், வீடமைப்பு, அடிப்படை வசதிகளின்றி இருப்பவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான செயல்முறைகள் இதில் அடங்கியுள்ளன.

நான்காவதாக, சமூகவியல் சமுதாயப் பிரச்சனைகள் தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் அடங்கியுள்ளன. இவற்றில், அடையாள அட்டை, குடியுரிமை, சமயம் அடிப்படையில் உருவாகக்கூடிய பிரச்சனைகள் இதன்வழி களையப்படும்.

தொடர்ந்து, இவ்வியூக வரைவுத் திட்டத்திலேயே 4 முக்கிய கோரிக்கைகளும் முன்மொழியப்பட்டுள்ளன. அதாவது :-

I.இந்திய சிறு தொழில் வியாபாரிகளுக்காக RM 500 கோடி பெருமளவில் சிறுகடன் சுழல் நிதித்திட்டம் ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும்.

II. நாட்டிலுள்ள தொழில்திறன் பயிற்சி மையங்களான ILP, IKBN, Kolej Komuniti எனப்படும் திறன் கல்லூரிகளில் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தது 3,000 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

III. பினாங்கு, நிபோங் திபாலில் உள்ள தொழில் திறன் கல்லூரியானது முன்னமே ஏற்றுக் கொள்ளப் பட்டதைப்போல் நிரந்தரமாக N.T.S ஆறுமுகம் பிள்ளை தொழில் திறன் கல்லூரியாகவே அடையாளம் காணப்பட வேண்டும். மேலும், ஆண்டுக்கு 50% விழுக்காடி இட ஒதுக்கீடு இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

IV. ம.இ.காவின் 70ஆம் ஆண்டு விழாவிலும், ம.இ.கா தேசிய மாநாட்டிலும் குறிப்பிட்டதைப் போல், இந்நாட்டில் 1957ஆம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த அனைத்து இந்தியர்களுக்கும் சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் குடியுரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
ஆகிய முக்கிய 4 கோரிக்கைகள் இவ்வியூக வரைவுத் திட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளன

இவ்வியூக வரைவுத் திட்டமானது அந்தந்தக் காலச் சூழலில் ஏற்படும் சவால்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும்  வகையிலேயே வரையறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதன்வழி, எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை எதிர்த்து, இவ்வியூக வரைவுத் திட்ட நோக்கத்தை முழுமையாக அடையவும் முடியும்.

எனவே, இந்தச் செயல் வரைவுத் திட்டத்தைத் தெளிவான கண்ணோட்டத்திலும், நல்ல நோக்கிலும், நேர் சிந்தனையிலும் அனைவரும் பார்க்க வேன்டும். இந்த திட்டத்தை அமல் படுத்தும் குழுவின் துரித நடவடிக்கைகளே இந்த வியூக வரைவுத் திட்டத்தின் வெற்றியாகும்.

மேலும், என் மேல் முழு நம்பிக்கை வைத்து இவ்வியூக வரைவுத் திட்டத்தை அமல்படுத்தும் குழுவிற்குத் தலைவராக என்னை நியமித்து இந்தியச் சமுதாயத்தை வழி நடத்தக்கூடிய தார்மீகப் பொறுப்பு எனக்கிருக்கின்றது என்பதைத் தெளிவுப்படுத்திய மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

23april117 23april0623april0123april02 23april0323april0523april16   23april11623april07 23april08 23april09 23april10 23april11 23april1223april1323april1423april15