பண அரசியலை பற்றி சோதிநாதன் பேசுவதா?: கிளானா ஜெயா துணைத்தலைவர் தியாகராஜன் அதிரடி

பண அரசியலை பற்றி சோதிநாதன் பேசுவதா?: கிளானா ஜெயா துணைத்தலைவர் தியாகராஜன் அதிரடி

s2

பிப்ரவரி 2, பண அரசியலை பற்றி பேசுவதற்கு டத்தோ சோதிநாதனுக்கு என்ன அருகதை இருக்கிறது. டெலிகாம்கேர் சேர், சுங்கை சிப்புட் வீட்டு நிலப்பிரச்சனை உட்பட பல பணவிவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் இவர் மீது இருக்கிறது. அதோடு ம.இ.கா தேர்தலில் பேராளர்களுக்கு 200 வெள்ளி இவர் கொடுத்தார் என்பது உண்மையா? இல்லையா? இவர் எல்லாம் பண அரசியலை பற்றி பேசலாமா? என கிளானா ஜெயா தொகுதி துணைத்தலைவர் தியாகராஜன் கேட்டுள்ளார்.

இவரை பற்றி அனைவரும் அறிந்த நிலையிலும் நல்லவர் போல வேடம் போட்டு ம.இ.கா வின் நிலைமை பற்றி கருத்துரைத்திருப்பதும், அதோடு அநீதியை எதிர்த்து போராடுவதாக குறிப்பிட்டிருப்பதும், வேடிக்கையாக இருக்கிறது. மேலும் பண அரசியலால் கட்சி நாசமாகி இருப்பதற்கு மூலக்காரணமே இவரும், டத்தோ பாலகிருஷ்ணனும் தான், இவர்களால் தான் கட்சி நாசமாகிக் கொண்டிருக்கிறது.

பேராளர்களுக்கு பணம் கொடுக்கும் பழக்கத்தை கொண்டு வந்தவரே இந்த பாலா தான் என பலரும் குற்றம் சாகொடுக்கும் பழக்கத்தை கொண்டு வந்தவரே இந்த பாலா தான் என பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள். அந்த அளவுக்கு கட்சியை கெடுத்து வைத்துள்ளார்கள். ம.இ.கா வின் வரலாறு அறியாத கோமாளி பாலா போன்றோரின் சுயநலத்தினால் தான் ம.இ.கா வின் தரம் குறைந்து போனது, மறுதேர்தல் பிரச்சனையும் வந்தது.

s1

கட்சியை தங்களின் சுயநலத்துக்காக பயன்படுத்தும் டத்தோ பாலா ம.இ.கா இளைஞர் பகுதியினரை பற்றி சம்பந்த இல்லாத பிரச்சனைக்கு விமர்சனம் செய்திருப்பது தேவையில்லாதது. இவருக்கு அவர்களை விமர்சனம் செய்ய தகுதி இருக்கிறதா? வெள்ளப்பிரச்சனையின் போது ஓடி ஓடி உதவியவர்கள் இளைஞர் பகுதியினர். இவர்களை விமர்சிக்கும் பாலா போன்றோர் வெள்ளப்பிரச்சனையில் தனிப்பட்ட முறையில் ஏதேனும் செய்திருப்பார்களா? தில்லு முல்லுகளினால் பதவிக்கு வந்து விட்டோம் என தலை கால் புரியாமல் ஆட வேண்டாம்.

தேசியத்தலைவர் சரியில்லாத காரணத்தால் “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் “என்பது போல பாலா போன்றோர் தங்களின் இஷ்டத்துக்கு பேசி வருகிறார்கள். தலைவரின் நாற்காலியில் அடுத்த தலைவராக வரும் எண்ணத்தில் குமார் அம்மான், பிரகா‌ஷ் ராவ் ஆகியோர் அமர்ந்து கொண்டு பேட்டிகள் பல கொடுத்ததும், சந்கொடுத்ததும், சந்திப்பு நிகழ்த்தியதும் குற்றம் இல்லையாம்! இளைஞர் பகுதியினர் அமர்ந்து புகைப்படம் எடுத்தது மட்டும் குற்றமாம்!

கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் என சொல்லிக்கொள்ள அருகதை இல்லாது உதவித்தலைவராக இருக்கும் டத்தோ சோதிநாதன், டத்தோ பாலகிருஷ்ணன் ஆகியோர் கட்சியின் களங்கத்திற்கு என்ன தான் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். “வேலியே பயிரை மேய்ந்தார் போல” கட்சியை காக்க வேண்டிய இடத்தில் இருக்கும் இவர்களே! கட்சியின் களங்கத்திற்கு காரணாமாகிப்போனார்கள் என்பது தான் அப்பட்டமான உண்மை.என தியாகராஜன் தெரிவித்துள்ளார்.