MH17: 42 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

MH17: 42 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Hercule

கோலாலம்பூர், ஆகஸ்டு 11- கடந்த ஜூலை 17-ஆம் தேதி உக்ரைன் எல்லையில் விபத்துக்குள்ளாகிய MH17 விமான பயணிகளில் இதுவரை 42 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக DVI எனப்படும் பேரிடர் சவ அடையாள நிபுணத்துவ குழு தெரிவித்துள்ளது.

இவர்களில் 21 பேரின் சடலங்கள் தங்கள் நாட்டைச் சேர்ந்தது என நெதர்லாந்து பாதுகாப்பு மற்றும் நீதித்துறை தெரிவித்துள்ளது.இதுவரை 65 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளர்.

எல்லா சடலங்களையும் அடையாளம் காணும் பணி எதிர்வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இராணுவ முகாமில் 200 தடவியல் நிபுணர்கள் சடலங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 21 தடவியல் நிபுணர்கள் மலேசியாவைச் சேர்ந்தவர்களாவர்.