மெட்ரிகுலேஷன் கல்விக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

மெட்ரிகுலேஷன் கல்விக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

SMB

நவம்பர் 6, 2015/2016-ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் கல்விக்கான விண்ணப்ப தேதி  அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தகுதியுள்ள மாணவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்வது சிறப்பு என கல்வித் துணையமைச்சர் ப. கமலநாதன் தெரிவித்தார். கடந்த வருடம் 6,136 இந்திய மாணவர்கள் விண்ணப்பித்திருந்த வேளை, அனைத்துத் தகுதிகள் இருந்தும் 352 மாணவர்கள் இந்த மெட்ரிகுலேஷன் கல்விக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, மாணவர்கள் உடனடியாகப் பதிந்துகொள்வது சிறப்பு. மேல் விபரங்களுக்கு மாணவர்கள் மெட்ரிகுலேஷன் பிரிவை நாடலாம் என துணைக் கல்வியமைச்சர் கமலநாதன் தமதறிக்கையில் தெரிவித்தார். தொலைபேசி எண்கள். 03-88844083 அல்லது http:www.moe.gov.my என்ற அகப்பத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் தேவையான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.