தேச நிந்தனைச் சட்டம் நியாயமானதாக இருக்கும்: பிரதமர்

தேச நிந்தனைச் சட்டம் நியாயமானதாக இருக்கும்: பிரதமர்

020502-D-2987S-027

டிசம்பர் 1, விரைவில் அமலுக்கு வரவிருக்கும் தேச நிந்தனைச் சட்டம் அனைவருக்கும் நியாயமானதாக இருக்கும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
இஸ்லாமியர்களையும் முஸ்லிம்களுக்கும் மட்டுமின்றி அனைத்து இனத்தவர்களுக்கும் இச்சட்டம் பாதுகாப்பானதாக இருக்கும் என பிரதமர் தெரிவித்தார்.
‘தேச நிந்தனைச் சட்டம் மற்ற இனத்தவர்களை இழிவுபடுத்துவோர் மீது சட்டபடி தண்டிக்க வழிகோலும்’ என நேற்று புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற பிபிபி கட்சியின் 61-வது ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய முன்னணியை ஆட்சியில் வைத்துக்கொள்வதற்கும் தேச நிந்தனை சட்ட அமலாக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தெரிவித்தார்.