ம.இ.காவில் உண்மை நிலவரங்களை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்: டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

ம.இ.காவில் உண்மை நிலவரங்களை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்: டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

Palanivel

ஜனவரி 5, ம.இ.கா-வில் ROS எனப்படும் சங்கங்களின் பதிவிலாகா மறுதேர்தலுக்கு உத்தரவிட்டப் பிறகு நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பான உண்மை நிலவரங்களை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
ம.இ.கா-வில் ஒரு பகுதியினர் மேற்கொண்ட புகார் மீது விசாரணை மேற்கொண்ட ROS, கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி ம.இ.கா மறுதேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இவ்விவகாரம் தொடர்பாக எந்த ஒரு உண்மை விளக்கமும் பெறுவதற்கு முன்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.
இவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்கு நாங்கள் உடனடியாக வழக்கறிஞர்களை நியமித்தோம். அவர்கள் தந்த அறிவுரையின் அடிப்படையில் டிசம்பர் 24-ஆம் தேதி. ம.இ.கா விவகாரம் குறித்த விளக்கம் கோரி ஆர்.ஓ.எஸ்-க்குக் கடிதம் அனுப்பினோம்.இக்கடிதத்திற்கு ஆர்.ஓ.எஸ் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி கடிதம் வழி பதிலனுப்பி உள்ளது.
ஆர்.ஓ.எஸ் கடிதம் வாயிலாக எங்கள் வழக்கறிஞர்கள் இவ்விவகாரத்தை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து விரைவில் ஆலோசிப்பார்கள். ம.இ.காவின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு என்னால் இவ்விவகாரம் குறித்த மற்ற விபரங்களைத் தற்போதைக்கு வெளியிட முடியாது.
ஆனால், மஇ.காவில் நிலவி வரும் இவ்விவகாரத்தைக் கையாளும் வகையில் ஆர்.ஓ.எஸ்-சிடம் கால அவகாசம் கோரி கடந்த ஜனவரி 2-ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளோம்.
1966-ஆம் ஆண்டு சங்கங்களுக்கான சட்டத்தின் படி, ஆர்.ஒ.எஸ்-சை நாடுவதற்கும் ஒரு நெறிமுறை உண்டு என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் எங்கள் வழக்கறிஞர்களுடன் இணைந்து இவ்விவகாரத்தை ம.இ.காவின் நலனைக் கருத்தில் கொண்டு சுமூக தீர்க்க முனைந்துளோம்.

கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 90 நாட்களுக்குள் ம.இ.கா-வில் மறுதேர்தல் நடத்தப்படாவிட்டால் அதன் பதிவு ரத்து செய்யப்படும் என மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. அதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம் என ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்தார்.