டத்தோ மோகனை மட்டும் அல்ல, யாரையும் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் இடைக்கால தேசியத் தலைவர் வசம் இல்லை

டத்தோ மோகனை மட்டும் அல்ல, யாரையும் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் இடைக்கால தேசியத் தலைவர் வசம் இல்லை

Sivaraj1 (1)

மார்ச் 27, கட்சியின் ஒரு நீதிமன்றத்தில் இருக்க, இன்னொரு பாதி உட்கட்சிப்பூசலில் சிக்கி இருக்க கட்சியின் தேசியத் தலைவர் இப்பொழுது கட்சியை வலுப்படுத்த செயலற்ற வேண்டுமே அன்றி இப்படி கட்சியில் இருப்போரை நேசிப்போரை எல்லாம் கட்சியை விட்டு நீக்கக் கூடாது.

முதலில் டத்தோ ஸ்ரீ கோ.பழனிவேல் சங்கப்பதிவிலாகவின் ஆணையைப் புரிந்துக்கொள்ள வேண்டும். கட்சியின் மூத்த உறுப்பினர் என்கிற முறையிலும் ஒரு அமைச்சர் என்கிற முறையிலும் சங்கப்பதிவிலாகவின் ஆணையை பின்பற்றா விட்டால் ம.இ.காவின் மற்ற உறுப்பினர்கள் எப்படிப் புரிந்துக் கொள்வார்கள்? மற்ற இயக்க உறுப்பினர்கள் எப்படி நமது நாட்டின் சங்கப்பதிவிலாகவை மதிப்பார்கள்? டத்தோ ஸ்ரீ. ஜி.பழனிவேல்தானே ஒரு முன்னுதரணமாக விளங்கவேண்டும்.

தெளிவாக கூறிகிறேன், தேசியத் தலைவரும் நீதிமன்ற செல்லும் உரிமை இருப்பதாகவே வைத்துக் கொணடாலும், நீதிமன்ற உத்தரவு வரும்வரை அவர் சங்கப்பதிவிலாகவின் ஆணையைத்தானே பின்பற்ற வேண்டும்? இந்த உண்மை அவருக்கு புரியவில்லையா அல்லது புரிந்தும் புரியாததுப் போல் இருக்கிறாரா தெரியவில்லை.

உண்மையிலேயே கொள்கையில் பிடிமானமுள்ளவர் என்றால், பேராவில் நமது கட்சியின் நாற்காலிகளை தேர்தல் சமயத்தில் விட்டு கொடுக்காமல் பேரம் பேசியிருக்க வேண்டும் அல்லது கட்சிக்குள் பிரதமர் தலையீடு இருக்கக்கூடாது என நினைத்திருந்தால் தேசியத் தலைவராக நீடிக்க பிரதமரை அப்பொழுது சந்தித்து பேசியிருக்க கூடாது. அப்பொழுது எல்லாம் கொள்கையை காற்றில் பறக்கவிட்டு இப்பொழுது கொள்கைவாதிப் போல் பேசுவது அபத்தமான ஒரு செயல்.
டத்தோ ஸ்ரீ பழனிவேலிடம் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது ஒன்றுத்தான். கட்சியின் நிலைபடும் மோசமாக இருக்கிறது. கட்சியின் மூத்த உறுப்பினர் என்கிற முறையிலும் கட்சியின் பெயரில் பல பட்டங்களையும், சலுகைகளும், பதவிகளையும் அனுபவித்த ஒரு தலைவர் என்கிற முறையிலும், கர்வம் ஆணவம், வீப்புக்காக கட்சியை பாழ்படுத்திவிடாதீர்கள். இதுவும் ஒரு வகையான நம்பிக்கை துரோகம்தான்.
இப்படி எல்லோரையும் கட்சியை விட்டு நீக்கும் படலத்தை விட்டுவிட்டு வருகின்ற தேர்தலில் கவனம் செலுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அத்தேர்தல்ல் யார் ஜெயித்தாலும் கட்சியை வழிநடத்தட்டும் இதுத்தான் பக்குவப்பட்ட ஒரு முடிவு. ஆனால் அதை செய்யாமல் இப்படி தேவையில்லாத நீக்கங்கள், புது நியமனங்கள் என்று கட்சி கெடுத்து குட்டிசுவர் ஆக்க வேண்டாம்.