MH17 மற்றும் MH370 விமான விபத்து: 33மில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளது மலேசிய அரசு

MH17 மற்றும் MH370 விமான விபத்து: 33மில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளது மலேசிய அரசு

malaysianflag

நவம்பர் 13, MH17 விமானம் கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும் பலியானதாகவும் தொடக்கக்கட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

MH370 விமானம் காணாமல்போய் அதில் பயணித்த 239 பேர் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. அதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக பெரும் பொருட்செலவில் மிகப் பெரிய தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே செலவுமிக்க தேடலாக அது அமைந்துள்ளது.

இந்த இரண்டு விமான விபத்துக்கு அரசாங்கம் இந்த ஆண்டு அதன் மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகளுக்கு மாட்டும் 33மில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளது.