நீர்வீழ்ச்சி, குளம், ஆறு போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்

நீர்வீழ்ச்சி, குளம், ஆறு போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்

swineflu

மார்ச் 16, பள்ளி விடுமுறையையொட்டி சுற்றுலா செல்லும் பொதுமக்கள் நீர்வீழ்ச்சி, குளம், ஆறு போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலியின் சிறுநீரினால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு 7806 லெப்டோஸ்பிரோசிஸ் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 95 பேர் இத்தொற்றுநோயினால் பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகத்தின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.