MH17 விமானம் வெடித்து சிதறி வீடியோ வெளியாகியுள்ளது

MH17 விமானம் வெடித்து சிதறி வீடியோ வெளியாகியுள்ளது

MH17

ஜூலை 21, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும் பலியாகினர். இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஏவுகணை வீசித் தாக்கப்பட்டவுடன் அது கீழே விழுந்ததை அந்த வழியாக காரில் சென்ற தம்பதி செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். சிதறி விழுந்த உடல்கள் கை, கால்கள் என்று மனித பாகங்களும், பயணிகளின் கருகிய உடல்களும் விமானத்தில் இருந்து பறந்து வந்து தரையில் விழுந்த காட்சியை அந்த தம்பதி வீடியோ எடுத்துள்ளனர். விமானம் விழுந்த இடத்தில் இருந்து கரும்புகை கிளம்புவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.