சிலாங்கூர் அரசங்கம் இந்து கோவில்களை இடிக்க திட்டம்

சிலாங்கூர் அரசங்கம் இந்து கோவில்களை இடிக்க திட்டம்

Selangor

பிப்ரவரி 26, சிலாங்கூர் அரசங்கம் சுமார் 100 இந்து கோவில்களை இடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினர் கணபதிராவ் அண்மையில் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்கென சிலாங்கூர் மந்திரிபெசார் அஸ்மின் அலியை அவசரமாக சந்திக்க ஹிண்ட்ராப் மக்கள் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

அண்மையில் இடிக்கப்பட்ட 60 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை முனிஸ்வரர் நாகேஸ்வரி கோவிலைக் காட்டிலும் இக்கோவில்கள் மிகவும் பழமையானவை என்றும் கணபதிராவ் கூறியிருந்தார்.