பிளவுப் படாத ஆதரவின் எதிரொலியால் டாக்டர் சுப்ரா போட்டியின்றி தேர்வுப் பெற வேண்டும்

பிளவுப் படாத ஆதரவின் எதிரொலியால் டாக்டர் சுப்ரா போட்டியின்றி தேர்வுப் பெற வேண்டும்

s-subramaniam1-020713_620_411_100

ஆகஸ்டு 5, ம.இ.கா உறுப்பினர்கள், கிளை, தொகுதி தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், மேல்மட்டத்தலைவர்கள் இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு, புத்ரி அமைப்பினர் என கட்சியில் பெரும்பாலானோர் பிளவு படாத ஆதரவை இடைக்காலத்தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்களுக்கு வழங்கி வரும் நிலையில் வருகின்ற கட்சியின் மறுதேர்தலில் இவர் போட்டியின்றி தலைவராக தேர்வு பெற வேண்டும்.

கட்சியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல இவருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். அந்த வகையில் ம.இ.கா இளைஞர் பகுதி வற்றாத ஆதரவை தொடர்ந்து அளிக்கும். முன்னாள் தேசியத்தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் இளைஞர் பகுதியின் வளர்ச்சியில் அக்கறைகாட்டவில்லை. கட்சி, சமுதாய பிரச்சனைகள் சார்ந்து எண்ணிலடங்கா சேவைகளை முன்னாள் இளைஞர் பகுதியின் தலைமையிலும் என்னுடைய தலைமையிலும் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் முன்னாள் தலைமை இளைஞர் பகுதியின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. இந்தியர்களின் தாய்க்கட்சியாகிய ம.இ.காவின் அரணாக விளங்கும் இளைஞர் பகுதியை கண்டு கொள்ளாதவரின் தலைமையில் கட்சி பல இன்னல்களை சந்தித்தது. கட்சி தேர்தல் முறைகேட்டின் எதிரொலியால் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வு காண அவர் தவறினார்.

முன்னுக்குபின் முரணான நடவடிக்கைகள், அக்கறைபின்மை, பதவியை தக்கவைக்க தில்லுமுல்லுகள், கட்சியை குழப்பான சூழலில் வைத்து இருந்தது, சொல்வாக்கு இல்லாத நிலையில் சட்டவிதிகளின்படி ம.இ.காவின் உறுப்பினர் தகுதியை பழனிவேல் இழந்து விட்டார். இவரால் அரங்கேற்ற பிரச்சனைகளுக்கு இடைக்காலத் தலைவர் கட்சியின் வளர்ச்சியையும், ஒற்றுமையையும் மனதில் வைத்து செயலாற்றி வருகிறார். எனது நிலைப்பாடு மட்டிமில்லாது ஒட்டுமொத்த ம.இ.காவினரின் எண்ணமாக இவரே தொடர்ந்து கட்சியை வழிநடத்த போட்டியின்றி தேர்வு பெற வேண்டும். இவர் கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்தி கடந்த கால தலைமையில் இழந்தவற்றை மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கட்சியில், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு, இழந்தவற்றை மீட்டெடுத்து, ம.இ.காவை பலப்படித்தி ஒற்றுமையாக டாக்டர் சுப்ரா அவர்களின் தலைமையில் பயணிப்போம். முடிந்து போன சட்டத்திற்கு புறம்பானவர்களின் கருத்துக்களை புறக்கணிப்போம்.