வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 500 தன்னார்வலர்கள் முன்வந்தார்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 500 தன்னார்வலர்கள் முன்வந்தார்

naw

ஜனவரி 5, கடந்த சில வாரங்களாக நாட்டில் சில மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 5000 தன்னார்வலர்களைப் பிரதமத்துறை அனுப்பியிருப்பதாக நாட்டின் துணை பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
அரசு சார்பற்ற இயக்கங்கள் ஒன்று சேர்ந்திருக்கும் இக்குழு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வசிப்பிடங்களைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுப்படவுள்ளது. 5000 தன்னார்வலர்களை வழி அனுப்பி வைக்கும் இந்நிகழ்ச்சியில் துணை பிரதமர் முகிதின் யாசின் உட்பட பிரதமத்துறை அமைச்சர்களான டத்தோ ஸ்ரீ ஷஹிடான் கசீம் மற்றும் டத்தோ ஸ்ரீ ஜமில் கீர் பஹாரோம் மற்றும் தேசிய தலைமை செயலாளர் தான் ஸ்ரீ அலி ஹம்சாவும் இணைந்துள்ளனர்.
இதனிடையே, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் மற்றும் உணவுகள் யாவும் 11 பேருந்துகளில் அனுப்பப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.