கூட்டரசு நீதிமன்றத்திற்கு இணையாக ஷரியா நீதிமன்றம் கருதப்படக்கூடாது

கூட்டரசு நீதிமன்றத்திற்கு இணையாக ஷரியா நீதிமன்றம் கருதப்படக்கூடாது

Sivaraj1 (1)

கோலாலம்பூர், நவம்பர். 18-ஷரியா நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் விவாதங்கள், இந்நாட்டு கூட்டரசு நீதிமன்றதில் விவாதங்களுக்கு இணையான ஒன்று என்று விவாதிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மஇகா இளைஞர் அணி வலியுறுத்துகிறது. இது இந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒன்றாகும்.

இஸ்லாமிய சட்டத் திட்டங்கள் மாநில அரசியலமைப்புக்கு உட்பட்டது மட்டுமே. கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை என தெளிவாக அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுள்ளது.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டங்களுக்கு நிகராக இன்னொரு சட்டத்திட்டங்கள் உருவாக்கப்படுவது கூட்டரசு அரசியலமைப்புக்கு எதிரான ஒன்றாகும். எனவே, இவ்விவகாரத்தில் விரிவான திருத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அரசியலமைப்பு சட்டம், மத சார்பற்ற சட்டங்களாக முழுமையாக மாற்றப்பட வேண்டும்.

ஷரியா நீதிமன்ற முறை அவசியத்தை உறுதி செய்ய பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். கூட்டரசு நீதிமன்றத்திற்கு இணையாக ஷரியா நீதிமன்றத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் ஜமில் கீர் பஹரோம் பரிந்துரை செய்துள்ளார்.

சுந்திரத்திற்கு பின்பு அல்லது பின்பு இயற்றப்பட்ட எந்த இந்த மத்திய, மாநில, முதன்மை அல்லது இரண்டாம் நிலை சட்டங்கள் எவையும் உச்ச அரசியலமைப்பு சட்டத்தை மிஞ்சுவதாக அமைந்தால் அது செல்லாது என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் மதம் இஸ்லாம் என்று அரசியலமைப்பு சட்டத்தின் 3 (1) இல் கூறப்பட்டிருந்த போதும், மற்றவர்களின் அடிப்படை உரிமைகள் புறக்கணிக்கப்படாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய கோட்பாடுக்கு உட்பட்டு மாநில ஆட்சி குழு குறிப்பிட்ட சட்டங்களை அமல்படுத்த முடியும். வரையரைக்கப்பட்ட தண்டனைகளை வழங்க முடியும். அதிகபட்சமாக 6 பிரம்படி, 5 ஆயிரம் வெள்ளி அபராதம், 3 ஆண்டிகள் சிறை மட்டுமே விதிக்க முடியும்.