மலேசியாவில் ஒரு இசைக் கல்லூரி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் இசைஞானி

மலேசியாவில் ஒரு இசைக் கல்லூரி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் இசைஞானி

img-20171005-wa0128மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் ஏற்பாட்டில் அக்டோபர் 07 ஆம் தேதி மாலை 07 மணியளவில் ஆக்சியாடா அரினா உள் அரங்கில் ராஜா த ஒன் மேன் என்ற இசைஞானி இளையராஜாவின் இன்னிசை மேடை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க இசைஞானியும் அவரது ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் மற்றும் மேடையில் பாடப் போகும் இந்தியாவின் மிகப் பிரபலமான பாடகர்களும் மலேசியா வந்தடைந்தனர்.

மலேசியா வந்துள்ள இளையராஜா அக்டோபர் 04 அன்று ராஜா த ஒன் மேன் இசை நிகழ்ச்சி குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார்.

நேற்று 05 அக்டோபர் 2017 மாலை இளையராஜா இசை மற்றும் மேலான்மை பிரைவேட் லிமிடட் IMM நிறுவனத்திற்கும் ஏசியா மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்திற்கும் இடையே மலேசியாவில் ஒரு இசைக் கல்லூரி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் இசைஞானி கலந்துகொண்டார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் IMM இசை பயிற்ச்சிகளை AMU மலேசியாவில் நடத்த அனுமதி பெறுகிறது. AMU பட்டங்கள் பட்டயங்களுக்கு தேவையான அங்கீகாரத்தை அரசுடமிருந்து பெற்று நடத்தும்.

முதலில் இசை சான்றிதழ் வகுப்புகள் துவங்கப்படும். வேண்டிய அங்கீகாரங்கள் பெற்றவுடன் இசை பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகள் அறிமுகப் படுத்தப் படும் என AMU சார்பில் தெரிவிக்கப்பட்டது.

AMU ஒரு மருத்த படிப்புக்கான நிறுவனமாக துவங்கி பின்னர் மேனான்மை கணிப்பொறி படிப்புகளை பயிற்றுவிக்க துவங்கியது. தற்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தந்தத்தின் மூலன் இசை துறை பயிற்சியிலும் AMU இனி ஈடுபடும் என்றும் AMU வின் பத்திக்கை குறிப்பில் தெரிவித்திருக்கிறது. பாரம்பரிய இசை, வெஸ்டர்ன் இசை மற்றும் பியூஷன் இசை ஆகியவை பாடத்திட்டங்களாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

இளையராஜா பேசுகையில் இசையின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வம் இசைக்காக தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியே இந்த இசை கல்லூரி முயற்சி என்பதையும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் தமிழகம் கர்நாடகா ஆந்திராவிலும் இசை கல்லூரி துவங்க IMM ஆரம்பகட்ட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் இதில் மலேசியா முந்திக் கொண்டு இளையராஜாவின் இந்த கனவுத் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதில் முந்திக் கொண்டது என்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும்.

ராஜா த ஒன் மேன் நிகழ்வில் பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ஏற்பாட்டு குழுவினர் வெளியிட்டனர். இசைஞானி இளையராஜாவின் ‘ராஜா த ஒன் மேன்” இசை நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னர் மலேசிய கலைஞர்கள் வருகின்ற பார்வையாளர்களை மகிழ்விக்கும் வித்கத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவார்கள் என்ற தகவலையும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ராஜா த ஒன் மேன் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி சீட்டு வேண்டுவோர் ஆக்சியாடா அரங்கில் சென்று வாங்கிக் கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு  www.myticket.asia

RAAJA THE ONE MAN CONCERT – Maestro Illayaraaja Live Concert 2017 on
7th October 2017 at
Axiata Arena Bukit Jalil, Kuala Lumpur.

#raajatheoneman #myeventsinternational

Raaja The One Man Show live in Kuala Lumpur

img-20171005-wa0129