பிடிபிடிஎன் கல்வி கடனுதவியை செலுத்துங்கள் இல்லையேல் கருப்புப்பட்டியலிடப்படுவீர்.

பிடிபிடிஎன் கல்வி கடனுதவியை செலுத்துங்கள் இல்லையேல் கருப்புப்பட்டியலிடப்படுவீர்.

Sivaraj1 (2)

பிடிபிடிஎன் கல்வி கடனுதவி பெற்ற மாணவர்கள், தங்களின் கடனை திருப்பச் செலுத்துவதற்குத் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பு வழிகள் வழங்கப்பட்ட போதும் அதனை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள தவறியுள்ளனர். எனவே, கல்வி கடனுதவியை திரும்ப செலுத்தாத மாணவர்களின் பெயரை (CCRIS) எனப்படும் மத்திய கடன் தகவல் சேமிப்பு மையத்தில் கருப்பு பட்டியலிட முடிவெடுத்திருப்பது பிடிபிடிஎன்னின் சரியான நடவடிக்கையாக அமைந்துள்ளது.

சுமார் 70 ஆயிரம் மாணவர்கள் தங்களின் பிடிபிடிஎன் கடன்களை திரும்ப செலுத்துவதில் பிடிவாத போக்கை கடைபிடிக்கின்றனர். இதனால், பிடிபிடிஎன் கடன் உதவியின் முலம் தங்களின் கல்வியை தொடரவிருப்பும் புதிய மாணவர்களுக்கு இவர்கள் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.

கடனுதவி பெற்ற முன்னாள் மாணவர்கள் தங்களின் கடனை திரும்ப செலுத்தாததால், பிடிபிடிஎன் மூலம் கடனுதவி பெறும் புதிய மாணவர்களின் எண்ணிக்கையும் முறைந்து வருகிறது. இந்நிலை மாணவர்களின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாக அமைந்துள்ளதால் கவலை அளிக்கிறது.

கடனுதவி பெற்ற மாணவர்கள் தங்களின் கடனை திரும்ப செலுத்துவதற்கு ஏதுவாக பிடிபிடிஎன் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த அணுகுமுறைகள் சரிவர கைக்கொடுக்கவில்லை.

பிடிபிடிஎன் உடனான கடனுதவி ஒப்பந்த உடன்படிக்கையை கடன் பெற்ற மாணவர்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை.பிடிபிடிஎன் மூலம் வழங்கப்படும் கடனுதவி பணம், அரசாங்கத்தின் பணம் என்று இன்னுமும் பலர் கருதுகின்றனர். அதனால், அதனை திரும்ப செலுத்த தேவையில்லை என்று அவர்கள் தவறாக முடிவெடுக்கின்றனர். வங்கியின் மூலம் காருக்கோ அல்லது வீட்டுக்கோ பெறப்படும் கடனை அவர்களால் திரும்ப செலுத்தாமல் இருந்துவிட முடியுமா?

எனவே, இறுதி நடவடிக்கையாக பிடிபிடிஎன் உடனான ஒப்பந்தத்தை மீறுபவர்களின் பெயர்களை தகவல் சேமிப்பு மையத்தில் கருப்புப்பட்டியலிட முடிவெடுத்திருப்பது சரியான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

கடனுதவி பெற்றவர்கள் அதனை திரும்ப செலுத்தாவிட்டால், அதனால், மற்றவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். மேலும் தங்களின் பெயர் கருப்பு பட்டியலிடப்பட்டால் அதனால் பாதிப்புக்குள்ளாக போவது யார் என்பதையும் அவர்கள் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளனர்.

பிடிபிடிஎன் கடன் உதவி பெற்ற 1 லட்சத்து 73 ஆயிரத்து 985 பேர் தங்கள் பட்ட படிப்பை முடித்து 3 ஆண்டுகள் கடந்து போதும் கரனை செலுத்தும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. கடந்த செப்டம்பர் வரை 21 லட்சம் மாணவர்களிக்கு 48.36 பில்லியன் ரிங்கிடை கடனுதவியாக பிடிபிடிஎன் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.