சாதனை புரியாத அரசியல் தலைவர்கள் பதவி விலக வேண்டும்: மகாதீர்

சாதனை புரியாத அரசியல் தலைவர்கள் பதவி விலக வேண்டும்: மகாதீர்

mahathir_703290830

நவம்பர் 12, பதவி காலம் முடியும் வரையிலும் எவ்வித சாதனையையும் புரியாத தலைவர்கள் அவசியம் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.
பதவியில் அதிகம் காலம் இருந்த போதிலும் எந்தவொரு சாதனையையும் புரியாமல் இருக்கும் தலைவர்கள் அவசியம் தங்களது பதவியைத் தகுதியுடையவர்களிடம் ஒப்படைத்து விட்டு அவர்களுக்கு ஆதரவாக தோள் கொடுப்பது நல்லது என அவர் மேலும் கருத்துரைத்துள்ளார்.

விட்டுக்கொடுப்பது தான் உண்மையான தலைமைத்துவம் என்றும் தானே காலம் முடியும் வரை பதவியில் இருப்பேன் என பதவி மோகம் கொண்டு பிடிவாதம் பிடிப்பது தவறு என்றும் செய்தியாளர் சந்திப்பில் துன் மகாதீர் தெரிவித்தார்.