தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு மாறுபட்ட சிந்தனையை அமலாக்க வேண்டும்

தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு மாறுபட்ட சிந்தனையை அமலாக்க வேண்டும்

STAR

டிசம்பர் 10, தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் இருந்தால்தான் தமிழ்ப்பள்ளிகள் இருக்கமுடியும் தமைமை ஆசிரியர்கள் இருக்கமுடியும், ஆசிரியர்களும் இருக்கமுடியும். அதன் வழி நமது இனம், கலை, கலாச்சாரம், பாண்பாடு, பாரம்பரியம், வரலாற்றினை நாம் காக்கமுடியும் அந்த உன்னதமான நோக்கத்தில் தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்ற சுலோகத்துடன் அரசங்க அங்கீகாரத்துடன் பிரதமர் துறையின் மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத்திட்ட வரை கல்வி உருமாற்றுத்துறை அமைக்கப்பட்டது.

பிரதமர் துறையின் மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத்திட்ட வரை கல்வி உருமாற்றுத்துறை தலைமை பொறுப்பாளர் டத்தோ டாக்டர் ராஜேந்திரன் நாடி முழுவதும் சூறாவழிப்பயணம் மேற்கொண்டு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததை கண்டு தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கம் மன வேதனையுறுகிறது.

டத்தோ டாக்டர் ராஜேந்திரனுடன் மலேசிய தமிழ்பள்ளிகளின் முகாமை அமைப்பாளர் அ.சு பாஸ்கரனுடன் முக்கியாதிகாரிகள் சிலரின் வருகையோடு சிரம்பானில் நடைபெற்ற ’தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு’ நிகழ்வில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் முழு ஆதரவு நல்காமல் புறக்கணித்தது வருத்தமளிக்கக்கூடிய ஒரு செயலாகும். அந்நிகழ்வில் சில தலைமை ஆசிரியர்களோடு குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இங்கு மட்டுமல்ல நிலழ்வு நடந்த பெறும்பாலான இடங்களில் இதே தோற்றம்தான் நிலவியது.