பாஸ் கட்சி பக்காத்தான் கூட்டணியிலிருந்து பிரியும் அபாயம்

பாஸ் கட்சி பக்காத்தான் கூட்டணியிலிருந்து பிரியும் அபாயம்

bass

பாஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் சிலர் அக்கட்சித் தலைவர்களை பக்காத்தான் கூட்டணியிலிருந்து வெளியேற வலியுறுத்துவதைத் தொடர்ந்து அவ்விரு கட்சிகளுக்குமிடையேயான உட்பூசல் பூதாகரமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கூட்டணியிலிருந்து வெளியேறுவது மீதான கோரிக்கை ஆகஸ்டு 10-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பாஸ் கட்சி கூட்டத்தில் முடிவுசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்சிக் கூட்டத்தில் சிலாங்கூர் மாநில தலைமைத்துவம் மற்றும் மந்திரி புசார் பதவி  குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.