டிசம்பர் 1 முதல் RON95 பெட்ரோலின் உதவித்தொகை நிறுத்தப்படும்

டிசம்பர் 1 முதல் RON95 பெட்ரோலின் உதவித்தொகை நிறுத்தப்படும்

petrol

நவம்பர் 22, எதிர்வரும் டிசம்பர் 1 முதல் RON95 பெட்ரோலின் உதவித்தொகை நிறுத்தப்படும் என உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹசான் மாலிக் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலையின் மாற்றங்கள் உலக சந்தை விலையைப் பொறுத்து அமையும். சந்தை விலை அதிகரித்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரிக்கும். அதேவேளை உலக சந்தையில் விலை குறைந்தால் எண்ணெய் மற்றும் டீசல் விலையும் குறையும் என ஹசான் மாலிக் கூறினார்.
இந்நிலையில், தற்போது RON95 பெட்ரோலின் விலை ஒரு லிட்டர் RM2.30 மாறாக டீசலின் விலை ஒரு லிட்டர் RM2.20 ஆகும்.