முழு பெட்ரோல் உதவித் தொகை வழங்கப்படாது

முழு பெட்ரோல் உதவித் தொகை வழங்கப்படாது

petrol

அக்டோபர் 27, அடுத்தாண்டு மேற்கொள்ளப்படும் பெட்ரோல் உதவித் தொகை பரிசீலனை திட்டத்தின் கீழ், 10000 ரிங்கிட்டுக்கும் அதிகமான சம்பளம் பெறுபவர்களுக்கு முழு பெட்ரோல் உதவித் தொகை வழங்கப்படாது.
இத்திட்டத்தின் கீழ், பெட்ரோல் உதவித் தொகையைப் பெற தகுதி உள்ளவர்கள் மூன்றுப் பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

முதல் பிரிவில், 5000 ரிங்கிட்டுக்கும் குறைவான சம்பளம் பெறுபவர்களுக்கு முழு உதவித் தொகையும், 5000 ரிங்கிட்டுக்கும் 10,000 ரிங்கிட் வரையிலான சம்பளம் பெறுபவர்களுக்கு பாதி உதவித் தொகையும் வழங்கப்படும் என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஹுஸ்னி ஹானாட்லா தெரிவித்தார்.