பைபிள் விவகாரத்தை முடிவுக்கொண்டு வந்த அஸ்மின் அலிக்கு பாராட்டு

பைபிள் விவகாரத்தை முடிவுக்கொண்டு வந்த அஸ்மின் அலிக்கு பாராட்டு

Sivaraj1 (2)

நவம்பர் 18,சிலாங்கூர் இஸ்லாமிய இலாகாவின் அதிரடி நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட மலாய் மற்றும் இயான் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பைபிள்லளின் அனைத்து பிரதிகளும் மீண்டும் மலேசிய பைபிள் சமூக இயக்கத்திடமே கொடுக்கப்பட்டிருப்பதை ம.இ.கா இளைஞர் அணி வரவேற்கிறது.

கிருஸ்துவர்களின் புனித நூலான பைபிளை பெறும் நடவடிக்கையில் நம்பிக்கை இழக்கும் கட்டத்தில் அனைத்து பைபள்களும் திரும்ப கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியைதந்துள்ளது. சபா மற்றும் சரவா கிருஸ்துவர்களால் பயன்படுத்தப்பட்ட இந்த பைபிள்களில் ‘அல்லாஹ்’ எனும் வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளதை தொடர்ந்து சிலாங்கூர் இஸ்லாமிய இலாகா இந்த பைபிள்களை அபகறித்தது. இந்த பைபிள் தீபகற்ப் மலேசியாவில் பயன்படுத்தப்படவில்லை.

10 மாதங்களுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட இந்த பைபிள்களை ஒப்படைக்க சிலாங்கூர் இஸ்லாமிய இலாகா மறுப்புத் தெரிவித்ததால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்த விவகாரத்திற்கு சிலாங்கூர் புதிய முதல்வர் அஸ்மின் அலின் நல்லதொரு தீர்வைக் கொடுத்திருப்பது வரவேற்க்கூடியதாக அமைந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்களை மீண்டும் ஒப்படைக்கும் சடங்கு, சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் முன்னிலையில் நடைபெற்றது. சிலாங்கூர் முதல்வர் அஸ்மின் அலியின் இந்த நடவடிக்கைக்கு நாங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

‘அல்லாஹ்’ எனும் வாசகத்தை கொண்டிருக்கும், கிருஸ்துவர்களின் புனித நூலான இந்த பைபிள் கிருஸ்துவர்களுக்கு செந்தமானது. எனவே, அவை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று சிலாங்கூர், அஸ்மின் அலி முன்னதாக எடுத்துரைத்திருந்தார். இந்த விவகாரத்திற்கு உடனடி தீர்வு கண்பதற்காக சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார்.

முன்னாள் சிலாங்கூர் முதல்வர் டான் ஸ்ரீ இப்ராஹிம் முயற்சி செய்த போதும், அது பலன் தரவில்லை. 1988ஆம் ஆண்டு இஸ்லாமிய சட்டப்படியே தாங்கள் இந்த பைபிள்களை பிறிமுதல் செய்திருந்ததாக ஜாயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய இலாகா தெரிவித்திருந்தது. அந்த சட்டம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் ‘அல்லாஹ்’ எனும் வாசகத்தை பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளதாக ஜாயிஸ் கூறியிருந்தது.