ம.இ.காவின் சட்ட விதிகள் திருத்தம் – சிம்பாங் பொன்விழா கொண்டாட்டத்தில் டாக்டர் சுப்ரா தகவல்

ம.இ.காவின் சட்ட விதிகள் திருத்தம் - சிம்பாங் பொன்விழா கொண்டாட்டத்தில் டாக்டர் சுப்ரா தகவல்

02july_5

ம இ கா கிளைகள் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரித்தார்.

கிளைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதற்கு ஏதுவாக கட்சியின் சட்டத் திருத்தம் அமைந்திருக்கும் என இன்று பேரா, புக்கிட் கந்தாங் தொகுதியிலுள்ள சிம்பாங் ம இ கா கிளையின் 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார்.

முன்பு, ஒரு கிளையில் 200 முதல் 500 பேர் வரை உறுப்பினர்களாக இருந்தனர். கிளைத் தலைவர் என்பவர் அக்கிளையின் உறுப்பினர்கள் அனைவரையும் அறிந்திருப்பார். அதோடு அப்பகுதியிலுள்ள அனைவரையும் தெரிந்திருப்பார். தேர்தல் காலங்களில் வாக்காளர்களை அடையாளங் காண்பதும் கடினமான செயல்ல்ல. ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல என டத்தோஸ்ரீ மேலும் கூறினார்.

பொன்விழா கொண்டாடும் சிம்பாங் கிளைப் பற்றி குறிப்பிட்ட டத்தோஸ்ரீ, அதன் தலைவர் திரு. தாசன் ம இ கா மூலம் இப்பகுதி மக்களுக்கு ஆற்றிவரும் சேவைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் சிறப்புச் செய்யப்பட்டனர். அதோடு, கல்வியில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் ஊக்குவிப்பு நிதியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், ம இ கா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ். கே. தேவமணி, பேராக் மாநில ம இ கா தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ வ. இளங்கோ, புக்கிட் கந்தாங் தொகுதி ம இ கா தலைவர் திரு. கோ. சண்முகவேலு, ம இ கா சிப்பாங் கிளைத் தலைவர் திரு. மா. தாசன் உட்பட ம இ கா வின் உயர்மட்ட தலைவர்களுடன் கிளைத் தலவர்களும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
02july_1 02july_2 02july_3 02july_4 02july_6 02july_7 02july_8 02july_9 02july_10