கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினார் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல்

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினார் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல்

god-jul1

டிசம்பர் 24, மலேசியாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடும் எல்லா கிறிஸ்த்துவர்களுக்கும் என இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறைமகன் பூமியிலே மனிதனாக அவதரித்தார் எனப் பறைசாற்றுகிறது விவிலியம். இயேசு பிறந்த இந்த நல்ல நாளை உலகமெங்கும் வாழுகின்ற கிறிஸ்த்துவர்கள் மிகக் குதூகலத்தோடு கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்தவகையில், மலேசியா நாட்டிலுள்ள கிறிஸ்துவர்கள் மிக மகிழ்ச்சியாக கிறிஸ்த்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்.

மலேசியாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.