இன்றைய ம.இ.காவின் நிலையைக் கண்டு மன வேதனை அடையும் செலாயாங் தொகுதி கிளைத்தலைவர்கள்

இன்றைய ம.இ.காவின் நிலையைக் கண்டு மன வேதனை அடையும் செலாயாங் தொகுதி கிளைத்தலைவர்கள்

mic

ஜூலை 7, ம.இ.கா என்னும் ஆலமரம் கடந்த 1946ஆம் ஆண்டு மலாயா சுதந்திர போராட்டத்தின் போது இந்திய வம்சாவளியினரின் நலன் காக்கும் பொருட்டு மதிப்புமிகு ஜான் திவி மற்றும் பல தியாகச் செம்மல்களால் உருவாக்கப்பட்ட ம.இ.காவை இன்று ஒரு சிலரின் சுயநல போக்கால் கட்சி பலமிழ்ந்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

69 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் ம.இ.கா கட்சி இன்று இந்தியர்கள் மட்டுமல்லாமல், மற்ற சமுகத்தினர்களும் கேலியும், கிண்டலும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நன்கு படித்த கட்சி மேல் மட்ட தலைவர்கள் தங்களது அதிகார போக்கில் ம.இ.காவில் குட்டையை குழப்பிக் கொண்டிருப்பதோடு கீழ் நிலையிலுள்ள கிளைத்தலைவர்கள் மற்றும் கிளைப் பொறுப்பாளர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். காலம் காலாமாக ம.இ.காவில் உறுப்பியம் பெற்று ம.இ.காவுக்காக பாடுபட்டு பல சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து வந்த உறுப்பினர்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார்கள் என்பதை மேல் மட்ட தலைவர்கள் உணர வேண்டும்.

தற்போதைய ம.இ.கா உள்விவகார பிரச்சினைகளை இரு தரப்பினர்களும் அமர்ந்து பேசி தீர்வு காண்பது கிளைத் தலைவர்களுக்கும், கட்சிக்கும், இந்திய சமுகத்துக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை விடுத்து இரு தரப்பினர்களும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவது கட்சிக்கு நன்மை பயக்காது. ஒரு தரப்பினர் எதிர்வரும் 9.7.2015ஆம் தேதி நாடு தழுவிய நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமென அறிவித்துள்ளார்கள். அதே வேளையில் மற்றொரு தரப்பினர் 10-11-12.7.2015ஆம் தேதிலளில் நாடு தழுவிய அளவில் வேப்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமென பாரங்களை அனுப்பியுள்ளார்கள். இந்நிலையில் கிளைத் தலைவர்கள் மிகவும் குழப்பத்தில் அழ்ந்துள்ளார்கள் என்பதை மேல்நிலை பொறுப்பாளர்கள் உணர வேண்டும்.

கிளைத்தலைவர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு முறையாக மூன்று ஆண்டு காலத்திற்கு தேர்வு செய்யப்பட்டு 2016 வரை அதிகாரப்பூர்வ கிளைத் தலைவர்களாக உள்ளார்கள். இந்நிலையில் தற்போது ம.இ.கா கட்சியில் இருக்கின்ற தேசிய நிலையிலான பொறுப்பாளர்கள் நீயா? நானா? என்று பதவி போராட்டம் நடத்திக் கொண்டு அதிகாரத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டு 2015ஆம் ஆண்டே தேர்தல் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். இரு தரப்பினர்களும் கருத்தில் கொள்ள வேண்டிய விசயம் யாதெனில் கடந்த 5.12.2014 ஆர் ஒ எஸ் தேசிய பதிவு இலாக்கா வழங்கிய கடிதத்தில் 2 கிளைகள், 5 தொகுதிகளுக்கு மட்டும் மீண்டும் முறையாக கூட்டம் நடத்தப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் 3 தேசிய உதவி தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு மறு தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டது அதற்கு முறையான தீர்வு காண்பதை விட்டு போட்டி மனப்பான்மையில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் சுயநல அடிப்படையில் செயல்பட்டு வருகிறார்கள் பதவியை மட்டுமே குறிக்கோளாக கருதி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால் கட்சி பிளவுப்பட்டு உள்ளது.

மேல்மட்ட பதவி போராட்டத்தில் மட்டுமே எண்ணம் கொண்டு செயல்படுவதால் முறையாக தேர்தல் ஆண்டாகிய 2016ஆம் ஆண்டு நடத்த வேண்டிய கட்சி தேர்தல் முன்பே கிளைத் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது என்ன நியாயம்.

கடந்த ஓராண்டு காலமாக ம.இ.கா கட்சி முறையாக செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இதற்கு யார் காரணம்? ஒட்டு மொத்த ம.இ.கா கிளைத் தலைவர்களும் மிகவும் மன வேதனை அடைந்துள்ளார்கள்.

எனவே தேசிய அளவில் பதவியில் அமர்ந்திருக்கும் படித்த, பட்டம் பெற்ற ம.இ.கா மேல்மட்ட தலைவர்களே கட்சி மற்றும் இந்திய சமுகத்தின் நலன கருதி இரு தரப்பினர்களும் அமர்ந்து பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு சுமுகமாக கட்சியை வழி நடத்துமாறு செலாயாங் தொகுதி கிளைத் தலைவர்கள் வலியுறித்தி கேட்டுக் கொள்கிறோம். சமுதாய நம்பிக்கையை ம.இ.கா இழந்து விடக்கூடாது. இல்லையெனில் பெரும்பான்மையான கிளைத் தலைவர்கள் வேறு முடிவுகள் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.