பத்துமலைத் திருத்தலத்தில் டி.எச்.ஆர் ராகாவின் தீபாவளித் தீபம்

Online Tamil News Malaysia

Online Tamil News Malaysia  நவம்பர் 3, 2015 – உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் தீபங்களின் விழா….. தீபாவளித் திருவிழா. ஐப்பசி மாதத்தில் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாடப்படுகிற மிக முக்கியமான பண்டிக்கையாகும்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு மலேசியாவின் முதன்மை நிலை தமிழ் வானொலி டி.எச்.ஆர் ராகா குழுவினர்‘டி.எச்.ஆர் ராகாவின் தீபாவளித் தீபம்’ எனும் நிகழ்ச்சியை கடந்த 31-ஆம் தேதி சனிக்கிழமை பத்துமலைத் திருத்தலத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். தீபாவளிப் பண்டிக்கையின் சிறப்புகளைத் தங்களுடைய ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரே நோக்கத்திற்காக வானொலியில் தீபாவளிக் குறித்த நேர்காணல்கள், கலந்துரையாடல்கள் வாயிலாகப் பல அரிய தகவல்கள் வழங்கப்பட்டது.

டி.எச்.ஆர் ராகா தலைவர் சுப்ராமணியம் வீரசாமி கூறுகையில், இன்றைய அதிநவின உலகில் நம் கலைக்கலச்சாரங்கள் மறக்கப்பட்டு வரும் வேளையில் தீபாவளிப் பண்டிக்கையின் போது ஏற்றப்படும் தீபங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திற்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் கடந்த காலத்தில் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த கலாச்சாரங்களையும் தருணங்களையும் இது போன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக மீண்டும் கொண்டு வர முடியும் எனத் தன் நம்புவதாக அவர் இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்த தகவல்களை அறிவிப்பாளர்கள் பத்துமலையிலிருந்து நேரடி ஒளிப்பரப்பில் பகிர்ந்து கொண்டார்கள்.

டி.எச்.ஆர் ராகா அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னதாகவே தன்னார்வலராகப் பதிவு செய்து கொண்ட ரசிகர்கள் சுமார் 3.30 மணியளவில் பத்துமலைத் திருத்தலத்தின் படிகளில் விளக்குகளை அடுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். கனந்த மழையிலும் ரசிகர்கள் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் ஆனந்தா, உதயா, ராம், கவிமாறன், சுரேஷ், கீதா, ஷாலு, அகிலா, யாசினி, ஜெய் ஆகியோர்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இரவு 7.30 மணிக்கு, பத்துமலை கோயில் நிர்வாகக் குழுவின் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ ஆர்.நடராஜா அதிகாரப்பூர்வமாக இந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். டி.எச்.ஆர் ராகா தலைவர் சுப்ராமணியம், “Glow Skin White” பிரதிநிதி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

Online Tamil News MalaysiaOnline Tamil News Malaysia