பொது சேவைகள் துறை (PSD) உதவித்தொகை விதிகள் மாற்றத்தை உடனே திரும்ப பெற வேண்டும் திரு. சிவராஜ் சந்திரன் வலியுறுத்தல்

பொது சேவைகள் துறை (PSD) உதவித்தொகை விதிகள் மாற்றத்தை உடனே திரும்ப பெற வேண்டும் திரு. சிவராஜ் சந்திரன் வலியுறுத்தல்

siva-mic

பொது சேவைகள் துறை (PSD) உதவித்தொகை விதிகள் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்தும் அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் நேற்று 19/03/2017 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவசரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள பொது சேவைகள் துறை(PSD) உதவித்தொகை பெறுவதற்கான விதிகள் பற்றி மத்திய மந்திரிசபையையும் கல்வித் துறையையும் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என ம.இ.கா இளைஞர் பிரிவு வலியுறுத்துகிறது.

தங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து பாடங்களிலும் A+ மதிப்பெண் பெற்றுள்ள எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மட்டுமே முழு உதவித்தொகை வழங்குவது என பொது சேவைகள் துறை(PSD) யின் அவசர முடிவை மத்திய அமைச்சரவையும் தலைமை செயலாளரும் தலையிட்டு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இந்த விதி மாற்றம் ஆர்வமான மாணவர்களுக்கு நியாயமற்ற ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என ம.இ.கா இளைஞர் பிரிசு நம்புகிறது. இந்த சமீபத்திய செயல் படிப்பின்மீது விரக்தியுற செய்வதுடன் அவர்களின் உறுதியையும் செயல்திறனையும் பாதிக்கும். இந்த அரசர முடிவு தேர்வில் சிறப்பாக மதிப்பெண் வாங்கியுள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை கனவுகளை தகர்த்துவிடும் என ம.இ.கா இளைஞர் பிரிவு அஞ்சுகிறது.

பொது சேவைகள் துறை உதவித்தொகை மாற்றங்கள் ஒவ்வொரு முறையும் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஏன் கடைசி நிமிடத்தில்தான் அறிவிக்கப்படுகின்றன என்பது எங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. பொது சேவைகள் துறை கால அவகாசம் கொடுத்து இருக்க வேண்டும் அல்லது கலந்தாலோசித்து இருக்க வேண்டும்.

இப்போது இந்த புதிய விதிகளை செயல்படுத்துவது ஏற்புடையதல்ல. மிகவும் கடினப்பட்டு முயற்சி செய்து எஸ்.பி.எம்.இல் சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவர்களின் நலனுக்கான இந்த விதிகளை திரும்ப பெற வேண்டும்.

இந்த புதிய விதிகளின்படி ஒரு மாணவர் 9 பாடங்களையே தேர்ந்தெடுத்து அவை அனைத்திலும் A+ பெற்று இருந்தால் அவர் உதவித்தொகைக்கு தகுதியானவர் ஆகிறார். ஆனால் ஒரு மாணவர் 11 பாடங்களை தேர்ந்தெடுத்து அதில் 10 பாடங்களில் A+ மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர் உதவித் தொகைக்கு தகுதி பெற மாட்டார் என்பது வருத்தமான விஷயம்.

மத்திய மந்திரிசபை இதை கருத்தில் கொண்டு நிறைய மாணவர்கள் பொது வேவைகள் துறை (PSD) உதவித்தொகைக்கு தகுதி பெறும் வகையில் பழைய விதிமுறைகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரும் என நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு திரு. சிவராஜ் சந்திரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

#psdscholarship