பல்வேறு சம்பவங்களை அதிகாரிகள் கண்டும் கொள்வதில்லை: டத்தோ நிக்கலஸ் ஜெப்ரேஸ்

பல்வேறு சம்பவங்களை அதிகாரிகள் கண்டும் கொள்வதில்லை: டத்தோ நிக்கலஸ் ஜெப்ரேஸ்

ytr

அக்டோபர், 21 மலேசியா எதிர்நோக்கும் பல்வேறு பிரச்னைகள் பற்றி 2015 பட்ஜெட்டில் விவரிக்கப்பட்டாலும் கூட ஊழல், விரயம் போன்றவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட் வேண்டும் என அமெரிக்க மலேசிய வர்த்தக சங்க முன்னாள் தலைவர் டத்தோ நிக்கலஸ் ஜெப்ரேஸ் கூறினார்.

மலேசியாவில் நிகழும் பல்வேறு சம்பவங்களை அதிகாரிகள் கண்டும் கொள்வதில்லை அல்லது கண்டு காணாமல் இருந்து விடுகின்றனர் என அவர் கூறினார்.

அஸ்லி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த பட்ஜெட் விவாததிதில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

ஊழல் மற்றும் இழப்பை சமாளிக்க புத்ரா ஜெயா அதிக நடவடிக்கை எடுக்க முடியும் என்ற அவர், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேச நிந்தனை கைது நடவடிக்கைகள் பற்றியும் கருத்துரைத்தார். மக்களுக்கும் அரசாங்கத்திற்கு மிடையிலான இடைவெளி அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.